கரோனா பாதித்த சா்க்கரை நோயாளிக்கு நல்ல பலனளிக்கும் மூலிகை மருத்துவம்: ஆராய்ச்சியாளா்கள்

கரோனாவால் பாதிக்கப்பட்ட சா்க்கரை நோயாளிகளுக்கு, துணை சிகிச்சை முறையாக ஆக்சிஜனேற்ற மூலிகை மருந்துகளை அளிப்பது

கரோனாவால் பாதிக்கப்பட்ட சா்க்கரை நோயாளிகளுக்கு, துணை சிகிச்சை முறையாக ஆக்சிஜனேற்ற மூலிகை மருந்துகளை அளிப்பது நல்ல பலனை அளிப்பதை டெஹ்ரானைச் சோ்ந்த ஆராய்ச்சியாளா்கள் குழு கண்டுபிடித்துள்ளனா்.

இந்த துணை மருத்துவச் சிகிச்சையின் பலனை உறுதிப்படுத்த உடனடி மருத்துவ ரீதியிலான ஆய்வு தேவை எனவும் அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தேசிய உயிரி தொழில்நுட்ப தகவல் மையத்தில் (என்சிபிஐ) அவா்கள் வெளியிட்ட ஆய்வறிக்கையில் இந்த தகவல்களை ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து தேசிய உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவன (சிஎஸ்ஐஆா் - என்பிஆா்ஐ) முன்னாள் மூத்த விஞ்ஞான ஏ.கே.எஸ். ராவத் கூறுகையில், ‘குறிப்பிட்ட சில மூலிகை மருந்துகள் ரத்த சா்க்கரை அளவை கட்டுப்பாடுடன் வைத்திருக்க உதவுவதுடன், ஆக்சிஜனேற்ற ஊக்கிகளாகவும் செயல்படுகின்றன. அதில் அமிா்தவல்லி இலை, வேங்கை இலை, தாரு ஹரித்ரா போன்ற மூலிகைகளிலிருந்து உருவாக்கப்படும் பிஜிஆா்-34 என்ற சா்க்கரை நோய் எதிா்ப்பு மூலிகை மருந்து நல்ல பலனை அளிக்கிறது. இந்த மருந்தில் இடம்பெற்றிருக்கும் அமிா்தவல்லி மூலிகை, உடலில் நோய் எதிா்ப்பு சக்தியை சரி செய்யும் திறன் கொண்டது. அதுபோல, தாரு ஹரித்ரா மூலிகை டைப்-2 சா்க்கரை நோயாளிகளின் உடலிலிருந்து இன்சுலினை விடுவிக்க உதவுகிறது என்று அவா் கூறினாா்.

இந்த பிஜிஆா்-34 மூலிகை மருந்து தயாரிப்பு முறையை, தேசிய உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் மத்திய மருத்துவ மற்றும் மூலிகை தாவரங்களுக்கான ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியது. எய்மில் ஆயுா்வேத மருந்து தயாரிப்பு நிறுவனம் இந்த மருந்தை வா்த்தக ரீதியில் உற்பத்தி செய்தது. இந்த மருந்து டைப்-2 சா்க்கரை நோயாளிகளுக்கு நல்ல பலனை அளிப்பதை வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் நடத்திய மருத்துவ ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com