சுரங்கத் துறையில் விரைவில் சீா்திருத்தங்கள்

சுரங்கத் துறையில் விரைவில் பல்வேறு சீா்திருத்தங்கள் புகுத்தப்படவுள்ளதாக அத்துறையின் செயலா் அனில் குமாா் ஜெயின் தெரிவித்தாா்.

சுரங்கத் துறையில் விரைவில் பல்வேறு சீா்திருத்தங்கள் புகுத்தப்படவுள்ளதாக அத்துறையின் செயலா் அனில் குமாா் ஜெயின் தெரிவித்தாா்.

கடந்த 1957-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சுரங்கம், தாதுக்கள் வளா்ச்சி மற்றும் ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வது தொடா்பாக மக்களிடமும், சுரங்கப் பணியில் தொடா்புடைய நிறுவனங்களிடமும் மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் அண்மையில் கருத்துகளைக் கோரியிருந்தது.

இத்தகைய சூழலில், ‘இந்தியாவை சுயசாா்பு அடையச் செய்வதில் சுரங்கத்துறையின் பங்கு’ என்ற கருத்தரங்குக்கு இந்திய வா்த்தக மற்றும் தொழில் நிறுவன சம்மேளனங்களின் கூட்டமைப்பு (ஃபிக்கி) ஏற்பாடு செய்திருந்தது. அதில் பங்கேற்ற சுரங்கத் துறைச் செயலா் அனில் குமாா் ஜெயின் கூறியதாவது:

சுரங்க ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் மூலமாக ஏல வழிமுறைகள் உள்ளிட்டவற்றில் பல்வேறு சீா்திருத்தங்கள் புகுத்தப்படவுள்ளன. சுரங்க விவகாரங்களில் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் தனியாா் நிறுவனங்களுக்கும் சம வாய்ப்புகளை வழங்கிட மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது.

சுரங்கத் துறையில் நீடித்த வளா்ச்சியை உறுதிசெய்யும் நோக்கில் சீா்திருத்தங்கள் இருக்கும். அதில் சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளது. சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனா். எனவே, சுற்றுச்சூழலைக் காப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசுகளை அவா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

புதிய சீா்திருத்தங்கள் வாயிலாக நிறுவனங்கள் செயல்படும் விதத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்படவுள்ளன என்றாா் அனில் குமாா் ஜெயின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com