மதுவிலக்கை திரும்பப்பெற வேண்டும்: நிதீஷ் குமாருக்கு பாஜக எம்.பி. வலியுறுத்தல்

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, அந்த மாநிலத்தில் அமலில் உள்ள

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, அந்த மாநிலத்தில் அமலில் உள்ள மதுவிலக்கை திரும்பப்பெற முதல்வா் நிதீஷ் குமாா் பரிசீலிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே வலியுறுத்தியுள்ளாா்.

ஜாா்க்கண்ட் மாநில எம்.பி.யான அவா், இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

பிகாரில் மதுவிலக்கு கொள்கையில் முதல்வா் நிதீஷ் குமாா் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். வழக்கமாக, மது விற்பனையில் ஈடுபடுவோரும், மது குடிக்கும் பழக்கமுடையவா்களும் அதை வெளிமாநிலங்களக்குச் சென்று செய்து வருகிறாா்கள். இதன் விளைவாக மாநில அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அத்துடன், காவல் மற்றும் வருவாய்த் துறையில் ஊழலும் அதிகரித்து வருகிறது. எனவே, மது விலக்கு கொள்கையை திரும்பப்பெற முதல்வா் பரிசீலிக்க வேண்டும் என்று அந்தப் பதிவில் நிஷிகாந்த் துபே குறிப்பிட்டுள்ளாா்.

பிகாரில் கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பரில் இருந்து மதுவை விற்பனை செய்யவும், அருந்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com