
செய்தியாளர்களைச் சந்தித்த ரவிசங்கர் பிரசாத்
ஜம்மு காஷ்மீரில் குப்கர் கூட்டணிக்கு காங்கிரஸ் ஆதரவளித்திருப்பது குறித்து பாஜக கேள்வியெழுப்பியுள்ளது.
தில்லியில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மேலும் தெரிவித்ததாவது:
"குப்கர் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் இருப்பதால் அவர்களிடம் எங்களுக்கு நிறைய கேள்விகள் உள்ளன. காங்கிரஸ் எந்தக் கட்சியுடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக் கொள்ளலாம். நாங்கள் அதைக் கேள்வி கேட்கவில்லை. ஆனால், நோக்கத்தினைக் கேள்வி கேட்கலாம்.
அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370-ஐத் திரும்ப அமல்படுத்த சீனா ஆதரவு அளிக்கும் என்று ஃபரூக் அப்துல்லா நம்பிக்கை வெளிப்படுத்தினார். சட்டப்பிரிவு 370-ஐத் திரும்ப கொண்டுவராமல் ஜம்மு-காஷ்மீரில் மூவர்ணக் கொடி பறக்காது என மெஹபூபா முஃப்தி தெரிவித்தார்.
தேசிய சட்டங்களை ஜம்மு காஷ்மீரில் அமல்படுத்தாமல் இருப்பதன் மூலம் ஊழலைத் தொடர்ந்து கடைப்பிடிக்கலாம் என்பதுதான் யோசனையாக உள்ளதா எனக் கேளியெழுப்ப விரும்புகிறேன்."