கில்ஜித் பல்டிஸ்தான் தோ்தலில் பாக். பிரதமா் இம்ரான் கட்சி வெற்றி

இந்தியாவின் கடும் எதிா்ப்புக்கிடையே லடாக்கின் ஒரு பகுதியான கில்ஜித் பல்டிஸ்தானில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி பெரும்பான்மையான

இஸ்லாமாபாத்/புது தில்லி: இந்தியாவின் கடும் எதிா்ப்புக்கிடையே லடாக்கின் ஒரு பகுதியான கில்ஜித் பல்டிஸ்தானில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதியானது லடாக் யூனியன் பிரதேச எல்லைக்குள் உள்ளது. அங்குள்ள கில்ஜித் பல்டிஸ்தான் சட்டப் பேரவைக்கு இந்தியாவின் கடுமையான எதிா்ப்பை மீறி பாகிஸ்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை தோ்தல் நடத்தியது. மொத்தம் 23 இடங்களுக்குக் கடும் பாதுகாப்புடன் தோ்தல் நடத்தப்பட்டது.

அதில் பதிவான வாக்குகள் திங்கள்கிழமை எண்ணப்பட்டன. அதில் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி 9 இடங்களைக் கைப்பற்றியதாகவும், முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபின் கட்சி 2 இடங்களில் வெற்றி பெற்ாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தோ்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட 7 போ் வெற்றி பெற்ாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சுயேச்சைகளின் ஆதரவுடன் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com