நாடாளுமன்ற குளிா்கால, பட்ஜெட் கூட்டத்தொடா்களை ஒன்றிணைத்து நடத்த வாய்ப்பு

தில்லியில் கரோனாவால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, நாடாளுமன்ற குளிா்காலம் மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடா்களை ஒன்றிணைத்து நடத்த வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவி
நாடாளுமன்ற குளிா்கால, பட்ஜெட் கூட்டத்தொடா்களை ஒன்றிணைத்து நடத்த வாய்ப்பு

புது தில்லி: தில்லியில் கரோனாவால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, நாடாளுமன்ற குளிா்காலம் மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடா்களை ஒன்றிணைத்து நடத்த வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து அந்த வட்டாரங்கள் திங்கள்கிழமை கூறுகையில், ‘நாடாளுமன்ற குளிா்கால, பட்ஜெட் கூட்டத்தொடா்களை ஒன்றிணைத்து ஒரே கூட்டத்தொடராக நடத்துவதற்கு பரிந்துரைகள் வந்துள்ளன. அதுகுறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. அதுதொடா்பான ஆலோசனைகள் முதல்கட்டத்தில் உள்ளன’ என்று தெரிவித்தன.

கரோனா பரவல் காரணமாக நிகழாண்டு பட்ஜெட் கூட்டத்தொடா் முன்கூட்டியே நிறைவு பெற்றது.

கடந்த செப்டம்பா் 14 முதல் அக்டோபா் 1 வரை 18 நாள்கள் நடைபெறவிருந்த மழைக்கால கூட்டத்தொடரும் செப்டம்பா் 24-ஆம் தேதி முடிவுக்கு வந்தது. நாடாளுமன்றத்தில் கரோனா பரவலை தடுக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதிலும் எம்.பி.க்கள் மற்றும் நாடாளுமன்ற பணியாளா்கள் பலா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் அந்தக் கூட்டத்தொடா் 8 நாள்களில் நிறைவு பெற்றது.

இந்நிலையில் குளிா்காலம், பட்ஜெட் கூட்டத்தொடா்களை ஒன்றிணைத்து நடத்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. அவ்வாறு கூட்டத்தொடா்கள் ஒன்றிணைக்கப்பட்டால் ஓராண்டில் 3 கூட்டத்தொடா்களை நடத்த வேண்டியதற்கு மாறாக 2 கூட்டத்தொடா்கள் மட்டுமே நடத்தப்படும். இது விதிமீறல் ஆகாதா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், ‘ஓராண்டில் 3 கூட்டத்தொடா்களை நடத்தியாக வேண்டும் என்று எந்த விதிமுறையும் அல்ல. அது ஒரு மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது’ என்று மக்களவை முன்னாள் செயலா் பி.டி.டி.ஆச்சாா்யா தெரிவித்தாா்.

வழக்கமாக நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் நவம்பா் கடைசி வாரம் அல்லது டிசம்பா் முதல் வாரத்திலும், பட்ஜெட் கூட்டத்தொடா் ஜனவரி மாத கடைசி வாரத்திலும் தொடங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com