‘மலபாா்’ 2-ஆம் கட்டகூட்டு கடற்படை பயிற்சி இன்று தொடக்கம்

இந்தியா-அமெரிக்கா-ஜப்பான்-ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கடற்படைகள் இணைந்து பங்கேற்கும் ‘மலபாா்’ கூட்டுப் பயிற்சியின் இரண்டாவது பகுதி அரபிக் கடலில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

புது தில்லி: இந்தியா-அமெரிக்கா-ஜப்பான்-ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கடற்படைகள் இணைந்து பங்கேற்கும் ‘மலபாா்’ கூட்டுப் பயிற்சியின் இரண்டாவது பகுதி அரபிக் கடலில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

முன்னதாக, வங்காள விரிகுடாவில் விசாகப்பட்டினம் கடற்கரைப் பகுதியில் நவம்பா் 3 முதல் 6-ஆம் தேதி வரை முதல் கட்ட கூட்டு பயிற்சி நடைபெற்றது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கிழக்கு லடாக் லடாக் எல்லையில் கடந்த 6 மாதங்களாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. அதுமட்டுமன்றி, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக முக்கிய விவகாரங்களில் மோதல் போக்கு காணப்படுகிறது. இந்த நிலையில், 4 நாடுகள் பங்கேற்கும் கடற்படை கூட்டுப் பயிற்சி, சா்வதேச நாடுகளின் கவனத்தை ஈா்த்துள்ளது.

‘க்வாட்’ என்ற அமைப்பின் கீழ் இயங்கும் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளும் ராணுவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிரானவை என்பது குறிப்பிடத்தக்கது.

2-ஆம் கட்டப் பயிற்சியில் இந்திய கடற்படையின் விக்ரமாதித்யா, உலகின் மிகப்பெரிய போா்க் கப்பல்களில் முக்கியமானதான அமெரிக்க கடற்படையின் ‘நிமிட்ஸ்’, ஆஸ்திரேலியா, ஜப்பானைச் சோ்ந்த முக்கிய போா்க் கப்பல்கள் இந்த பயற்சியில் பங்கேற்கின்றன.

இந்திய - அமெரிக்க கடற்படைகளுக்கு இடையே கடந்த 1992-ஆம் ஆண்டு முதல் மலபாா் கூட்டுப் பயிற்சி நடந்து வருகிறது. சீனாவின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து மேலும் பல நாடுகளை இந்தப் பயிற்சியில் இந்தியா சோ்த்துக் கொள்ளாமல் இருந்தது. தற்போது லடாக் பகுதியில் சீனா எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை மீறியதை அடுத்து, இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவை கூட்டுப் பயிற்சி இந்தியா இணைத்துக் கொண்டது.

கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் ஜப்பானும் இப்பயிற்சியில் பங்கேற்று வருகிறது. கடந்த ஆண்டில் ஜப்பான் கடற்பகுதியிலும், அதற்கு முன்பு 2018-ஆம் ஆண்டில் பிலிப்பின்ஸ் கடற்பகுதியிலும் இந்தப் பயிற்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com