பிகாரில் 15 அமைச்சர்களில் 13 பேர் கோடீஸ்வரர்கள்: தகவல்

பிகாரில் புதிதாகப் பதவியேற்றுள்ள 15 அமைச்சர்களில் 13 பேர் கோடீஸ்வரர்கள் என்று பிகார் தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்தத்துக்கான கூட்டமைப்பு இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பதவியேற்பு விழாவில் பிகார் அமைச்சர்கள்
பதவியேற்பு விழாவில் பிகார் அமைச்சர்கள்


பிகாரில் புதிதாகப் பதவியேற்றுள்ள 15 அமைச்சர்களில் 13 பேர் கோடீஸ்வரர்கள் என்று பிகார் தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்தத்துக்கான கூட்டமைப்பு இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தேர்தலுக்கு முன்பு சமர்பிக்கப்பட்ட பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதன்படி, 14 அமைச்சர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர். இதில் 6 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர்கள் 5 பேர். ஹெ.ச்.ஏ.எம். மற்றும் வி.ஐ.பி. கட்சிகளிலிருந்து தலா ஒருவர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். இந்த 14 அமைச்சர்களில் 2 பேர் பெண் அமைச்சர்கள்.

தாராபூர் தொகுதியில் வென்ற மேவா லால் சௌதரி அதிகபட்சமாக ரூ. 12.31 கோடி மதிப்பிலான சொத்துகளை வைத்துள்ளார். முன்னாள் பிகார் மேலவை உறுப்பினர் அசோக் சௌதரி இவர்களுள் குறைந்தபட்சமாக ரூ. 72.89 லட்சம் மதிப்பிலான சொத்துகளை வைத்துள்ளார்.

அமைச்சர்களில் 4 பேர் கல்வித் தகுதியாக 8 மற்றும் 12-ம் வகுப்புக்கு இடையே குறிப்பிட்டுள்ளனர். மற்ற 10 பேர் பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேல் படித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com