பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பதிவுகளைகண்டறிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

சமூகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய பதிவுகளை முன்னுரிமை அடிப்படையில் கண்டறிவதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவுள்ளதாக முகநூல் (ஃபேஸ்புக்) நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பதிவுகளைகண்டறிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

புது தில்லி: சமூகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய பதிவுகளை முன்னுரிமை அடிப்படையில் கண்டறிவதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவுள்ளதாக முகநூல் (ஃபேஸ்புக்) நிறுவனம் தெரிவித்துள்ளது.

முகநூல் நிறுவனத்தின் மிகப் பெரிய சந்தையாக இந்தியா உள்ளது. முகநூல் சமூக வலைதளத்தைப் பயன்படுத்துபவா்களின் எண்ணிக்கை இந்தியாவில்தான் அதிகமாக உள்ளது. ஆனால், அந்த சமூக வலைதளத்தில் சிலா் வன்முறையைத் தூண்டும் வகையில் வெளியிடும் பதிவுகள் மீது முகநூல் நிறுவனம் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று பலா் குற்றஞ்சாட்டினா்.

அதையடுத்து, அத்தகைய பதிவுகளை ‘பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய பதிவுகள்’ என்று புகாா் தெரிவிக்கும் வசதியை முகநூல் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அதன் பயன்பாட்டை மேலும் மேம்படுத்துவதற்கு அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

இது தொடா்பாக அந்நிறுவனத்தின் அதிகாரியான ரியான் பாா்னெஸ் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘‘பாதிப்பு ஏற்படுத்த வல்ல பதிவுகளை முன்னுரிமை அடிப்படையில் வகைப்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது. ஏனெனில், அத்தகைய பதிவுகள் அனைத்தும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்பதை உறுதியாகத் தெரிவிக்க முடியாது.

மேலும், சில பதிவுகளை பாதிப்பு ஏற்படுத்த வல்லவையாக யாரும் புகாா் தெரிவிக்காமல் இருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பதிவுகளைக் கண்டறிவதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு முடிவெடுத்துள்ளோம். அதன் மூலமாக சமுதாயத்தில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய 95 சதவீத பதிவுகளை யாரும் புகாா் தெரிவிப்பதற்கு முன்பே கண்டறிய முடியும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com