'நாட்டிலேயே பெங்களூருவில்தான் கரோனா இறப்பு விகிதம் குறைவு'

நாட்டின் மற்ற நகரங்களை விட பெங்களூருவில் கரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளதாக கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் தெரிவித்துள்ளார்.
கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர்  (கோப்புப்படம்)
கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் (கோப்புப்படம்)

நாட்டின் மற்ற நகரங்களை விட பெங்களூருவில் கரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளதாக கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு நகரில் கரோனா இறப்பு விகிதம் 1.1 சதவிகிதமாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது. அந்தவகையில் கர்நாடகத்திலும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கர்நாடகத்தில் நேற்று (செவ்வாய்க் கிழமை) 1,336 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8.64 லட்சத்தைக் கடந்துள்ளது. 

கரோனா தொற்றால் 16 பேர் பலியானதால், இதுவரை மொத்தமாக கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,557-ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே சுட்டுரையில் பதிவிட்டுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர், ''நாட்டின் மற்ற பெருநகரங்களை ஒப்பிடுகையில் பெங்களூருவில் கரோனா தொற்றால் பலியாவோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது. பெங்களூருவில் கரோனா இறப்பு விகிதம் 1.1 சதவிகிதமாக மட்டுமே உள்ளது. 

பெங்களூருவில் 17,707 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றிலிருந்து 3,36,880 பேர் குணமடைந்துள்ளனர். கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 93.94 சதவிகிதமாகவும், சிகிச்சைப் பெற்றுவருவோர் விகிதம் 4.93 சதவிகிதமாகவும் உள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com