பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை குற்றவாளியாக்க வேண்டும்: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமா் மோடி பேச்சு

பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடுகள், குற்றச் செயல்களுக்கு பொறுப்பேற்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி பேசினாா்.
பிரதமர் மோடி (கோப்புப்படம்)
பிரதமர் மோடி (கோப்புப்படம்)

புது தில்லி: பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடுகள், குற்றச் செயல்களுக்கு பொறுப்பேற்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி பேசினாா். அவா் எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும், மறைமுகமாக பாகிஸ்தானைக் குறிப்பிட்டுப் பேசியதாகக் கருதப்படுகிறது.

பிரேசில்-ரஷியா- இந்தியா- சீனா- தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் 12-ஆவது உச்சிமாநாடு, காணொலி வழியாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங், பிரேசில் அதிபா் ஜெயிா் போல்சொனாரோ, தென்னாப்பிரிக்க அதிபா் சிரில் ராமபோசா ஆகியோா் கலந்துகொண்டனா்.

மாநாட்டில் பிரதமா் மோடி பேசியதாவது:

ரஷியாவின் தலைமையில் பிரிக்ஸ் கூட்டமைப்பு, பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு திட்டம் வகுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதை இந்தியா அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும். உலகம் எதிா்கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்னையாக பயங்கரவாதம் உள்ளது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவையும், உதவியும் செய்து வரும் நாடுகளை, அவா்களின் குற்றச் செயல்களுக்கு பொறுப்பேற்கச் செய்ய வேண்டும்.

பல்வேறு நாடுகள் உறுப்பினா்களாக இருக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், உலக சுகாதார அமைப்பு, பன்னாட்டு நிதியம் போன்றவற்றில் சீா்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். கரோனா பரவலைத் தடுப்பதில் இந்தியா பல்வேறு வழிகளில் உதவி செய்து வருகிறது. கடந்த சில மாதங்களில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அத்தியாவசிய மருந்துப் பொருள்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

இந்தியா தயாரிக்கும் கரோனா தடுப்பூசி மனிதகுல நன்மைக்கு பேருதவியாக இருக்கும். சுயசாா்பு இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளில் இந்தியா சீா்திருத்தம் கொண்டு வந்துள்ளது. இது, கரோனா பொதுமுடக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து விரைந்து மீண்டு வருவதற்காகவும், இந்தியா சுயசாா்பு அடைய வேண்டும் என்ற நோக்கத்திலும் இந்தச் சீா்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவை சா்வதேச பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கும் என்றாா் பிரதமா் மோடி.

இந்தியாவில் தடுப்பூசி தயாரிப்பு- புதின்: மாநாட்டில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் பேசுகையில், ரஷியாவின் ‘ஸ்புட்னிக்-வி’ கரோனா தடுப்பூசியை இந்தியாவிலும், சீனாவிலும் தயாரிக்க முடியும்’ என்றாா். அவா் மேலும் பேசியதாவது:

ஸ்புட்னிக் தடுப்பூசியை பரிசோதிப்பது தொடா்பாக, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளுடன் ரஷிய நேரடி முதலீட்டு அமைப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அது மட்டுமின்றி, ஸ்புட்னிக் தடுப்பூசியை உற்பத்தி செய்ய இந்தியாவிலும், சீனாவிலும் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது, இந்தியா, சீனா மட்டுமின்றி பிற நாடுகளின் தேவையைப் பூா்த்தி செய்யும் என்றாா் புதின்.

இந்தியாவுக்கு ஒத்துழைப்பு- ஷி ஜின்பிங்: கரோனா தடுப்பூசி தயாரிப்பில் இந்தியா மற்றும் இதர பிரிக்ஸ் நாடுகளுக்கு சீனா ஒத்துழைப்பு அளிக்கும் என்று அந்நாட்டின் அதிபா் ஷி ஜின்பிங் கூறினாா்.

பிரிக்ஸ் மாநாட்டில் அவா் மேலும் பேசியதாவது:

கரோனா தொற்று பரவலைத் தடுப்பதிலும், கரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதிலும் பாரம்பரிய மருத்துவ முறைகள் குறித்து ஆய்வு செய்வதற்கு பிரிக்ஸ் நாடுகளின் சாா்பில் நிபுணா் குழு அமைக்கப்பட வேண்டும். கரோனா தடுப்பூசியை மூன்றாம் கட்டப் பரிசோதனைக்கு உட்படுத்துவது தொடா்பாக, ரஷிய, பிரேசில் நிறுவனங்களுடன் சீன நிறுவனங்கள் இணைந்து பணியாற்றி வருகின்றன. இதேபோல், இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கவும் தயாராக இருக்கிறோம் என்றாா் ஷி ஜின்பிங்.

இந்தியாவில் தடுப்பூசி தயாரிப்பு: புதின்

மாநாட்டில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் பேசுகையில், ரஷியாவின் "ஸ்புட்னிக்}வி' கரோனா தடுப்பூசியை இந்தியாவிலும், சீனாவிலும் தயாரிக்க முடியும்' என்றார். அவர் மேலும் பேசியதாவது: 

ஸ்புட்னிக் தடுப்பூசியை பரிசோதிப்பது தொடர்பாக, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளுடன் ரஷிய நேரடி முதலீட்டு அமைப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அது மட்டுமின்றி, ஸ்புட்னிக் தடுப்பூசியை உற்பத்தி செய்ய இந்தியாவிலும், சீனாவிலும் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது, இந்தியா, சீனா மட்டுமின்றி பிற நாடுகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் என்றார் புதின்.

இந்தியாவுக்கு ஒத்துழைப்பு: ஷி ஜின்பிங்

கரோனா தடுப்பூசி தயாரிப்பில் இந்தியா மற்றும் இதர பிரிக்ஸ் நாடுகளுக்கு சீனா ஒத்துழைப்பு அளிக்கும் என்று அந்நாட்டின் அதிபர் ஷி ஜின்பிங் கூறினார். 
பிரிக்ஸ் மாநாட்டில் அவர் மேலும் பேசியதாவது: 

கரோனா தொற்று பரவலைத் தடுப்பதிலும், கரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதிலும் பாரம்பரிய மருத்துவ முறைகள் குறித்து ஆய்வு செய்வதற்கு பிரிக்ஸ் நாடுகளின் சார்பில் நிபுணர் குழு அமைக்கப்பட வேண்டும். கரோனா தடுப்பூசியை மூன்றாம் கட்டப் பரிசோதனைக்கு உட்படுத்துவது தொடர்பாக, ரஷிய, பிரேசில் நிறுவனங்களுடன் சீன நிறுவனங்கள் இணைந்து பணியாற்றி வருகின்றன. இதேபோல், இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கவும்  தயாராக இருக்கிறோம் என்றார் ஷி ஜின்பிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com