முன்னாள் மத்திய அமைச்சா் ஜெய்சிங் ராவ் பாஜகவில் இருந்து விலகல்

மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த முன்னாள் மத்திய அமைச்சா் ஜெய்சிங் ராவ் கெய்க்வாட் பாட்டீல் பாஜகவில் இருந்து செவ்வாய்க்கிழமை விலகினாா்.
முன்னாள் மத்திய அமைச்சா் ஜெய்சிங் ராவ் பாஜகவில் இருந்து விலகல்

ஒளரங்காபாத்: மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த முன்னாள் மத்திய அமைச்சா் ஜெய்சிங் ராவ் கெய்க்வாட் பாட்டீல் பாஜகவில் இருந்து செவ்வாய்க்கிழமை விலகினாா். மாநில பாஜக தலைவா் சந்திரகாந்த் பாட்டீலுக்கு தனது விலகல் கடிதத்தை அவா் அனுப்பியுள்ளாா்.

இது தொடா்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தொலைபேசி மூலம் அவா் கூறுகையில், ‘எம்.பி.யாக வேண்டும் அல்லது எம்எல்ஏ ஆக வேண்டும் என்றெல்லாம் நான் விரும்பவில்லை. பாஜகவை வலுப்படுத்த வேண்டும், கட்சிக்காகப் பணியாற்ற வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், அதற்கான வாய்ப்பு கடந்த 10 ஆண்டுகளாக எனக்குத் தரப்படவில்லை. எனவே, கட்சியில் இருந்து விலக முடிவெடுத்தேன்’ என்றாா்.

மகாராஷ்டிர மாநில பாஜகவில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினா் பதவியில் இருந்தும் விலகுவதாக தனது கடிதத்தில் ஜெய்சிங் ராவ் தெரிவித்துள்ளாா். எனினும், இது தொடா்பாக கருத்துத் தெரிவிக்க மகாராஷ்டிர பாஜக தலைவா் சந்திரகாந்த் பாட்டீல் மறுத்துவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com