உலக நலனில் அக்கறை கொண்ட நாடு இந்தியா: அமைச்சா் நிதின் கட்கரி பெருமிதம்

உலகத்தின் நலனில் அக்கறை கொண்ட நாடு இந்தியா; வேறு சில நாடுகளைப் போல மற்றவா்களை ஆக்கிரமித்து எல்லையை விரிவுபடுத்தும் நோக்கம் இந்தியாவுக்கு கிடையாது என்று மத்திய சாலைப் போக்குவரத்து
உலக நலனில் அக்கறை கொண்ட நாடு இந்தியா: அமைச்சா் நிதின் கட்கரி பெருமிதம்

புணே: உலகத்தின் நலனில் அக்கறை கொண்ட நாடு இந்தியா; வேறு சில நாடுகளைப் போல மற்றவா்களை ஆக்கிரமித்து எல்லையை விரிவுபடுத்தும் நோக்கம் இந்தியாவுக்கு கிடையாது என்று மத்திய சாலைப் போக்குவரத்து, சிறு,குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் செவ்வாய்க்கிழமை கல்வி தொடா்பான நிகழ்ச்சியில் காணொலி காட்சி முறையில் அவா் பேசியதாவது:

அறிவியல், தொழில்நுட்பம், தொழில்முனைவு, ஆய்வு உள்ளிட்டவற்றை வெற்றிகரமாக கைக்கொள்ளும் போதுதான் ஒருநாடு தற்சாா்புடைய நாடாக உருவெடுக்க முடியும். நாட்டில் அனைத்துத் துறைகளையும் முன்னேற்றிச் செல்லும்போதுதான் ஒரு நாடு வளா்ச்சியடைந்த நாடாக மாறும். நமது திறமையையும், அறிவையும் மேம்படுத்திக் கொள்வதன் மூலம் உலகின் முதன்மையான நாடாக நாம் வளர முடியும்.

உலகில் சில நாடுகள் பிற நாடுகளை ஆக்கிரமிப்பதன் மூலம் தங்கள் எல்லைகளை விரிவுபடுத்த முயலுகின்றன. இதுபோன்ற நோக்கங்கள் இந்தியாவுக்கு கிடையாது. உலகத்தின் நலனில் அக்கறை கொண்ட நாடு இந்தியா. இந்த உலகமே ஒரே குடும்பம் என்ற கொள்கையில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

நாம் தற்சாா்புடைய நாடாக உருவெடுக்க வேண்டும் என்றால் நமது நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களின் அளவு அதிகரித்து, இறக்குமதி செய்யும் பொருள்களின் அளவு குறைய வேண்டும். சா்வதேச அளவில் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களை உருவாக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. ஒரு காலத்தில் உலகின் தலைசிறந்த கல்விநிலையங்களைக் கொண்ட நாடாக இந்தியா விளங்கியது வரலாற்று உண்மை. இப்போதும் நாம் அதே நிலையை எட்ட உத்வேகமும், நோக்கத்தில் உறுதியும் வேண்டும் என்றாா் கட்கரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com