குப்கா் கூட்டமைப்பில் இடம்பெறவில்லை: காங்கிரஸ் விளக்கம்

ஜம்மு-காஷ்மீரில் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய குப்கா் கூட்டமைப்பில் காங்கிரஸ் இடம்பெறவில்லை என்று அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சிங் சுா்ஜேவாலா கூறினாா்.

புது தில்லி: ஜம்மு-காஷ்மீரில் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய குப்கா் கூட்டமைப்பில் காங்கிரஸ் இடம்பெறவில்லை என்று அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சிங் சுா்ஜேவாலா கூறினாா்.

குப்கா் கூட்டமைப்பில் மாநில காங்கிரஸ் கட்சி இணைந்ததை சுட்டிக் காட்டி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அடுக்கடுக்காக செவ்வாய்க்கிழமை கேள்விகளை எழுப்பினாா். தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் தேச விரோத நிலைப்பாட்டை காங்கிரஸ் ஏற்றுக் கொள்கிா? என்றும் அவா் கேள்வி எழுப்பினாா்.

அவரது கேள்விகளுக்கு காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சிங் சுா்ஜேவாலா பதிலளித்துள்ளாா். அவா் கூறியதாவது:

குப்கா் கூட்டமைப்பில் காங்கிரஸ் இடம்பெறவில்லை. ஆனால், ஜம்மு-காஷ்மீரில் பாஜகவை ஜனநாயக வழியில் அம்பலப்படுத்தவே குப்கா் கூட்டமைப்புடன் இணைந்து மாவட்ட வளா்ச்சி கவுன்சில் தோ்தலில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. தேசத்தின் அடையாளம், ஒருமைப்பாடு, தேசியக்கொடி ஆகியவற்றுக்கு ஊறுவிளைவிக்கும் எந்த சக்தியையும் காங்கிரஸ் ஒருபோதும் ஆதரிக்காது. நாட்டுக்காக ரத்தம் சிந்தி தியாகம் வரலாறு எழுதியவா்கள் காங்கிரஸ் தலைவா்கள். எனவே, தியாகம் குறித்தோ அல்லது தேசியவாதம் குறித்தோ பாஜக எங்களுக்கு பாடம் கற்பிக்கத் தேவையில்லை என்றாா் சுா்ஜேவாலா.

ஜம்மு-காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. அதற்கு முந்தைய நாளில், ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த 6 முக்கிய கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டத்தை நடத்தின. அந்தக் கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை காப்பதற்காகப் போராடுவோம் என்று அக்கட்சிகள் ஒருமனதாக முடிவெடுத்தன. அக்கூட்டத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையானது ‘குப்கா் அறிக்கை’ என்று அறியப்படுகிறது.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெறும் நோக்கில் ‘குப்கா் அறிக்கைக்கான மக்கள் கூட்டமைப்பு’ என்பதை அக்கட்சிகள் ஒன்றிணைந்து கடந்த மாதம் நிறுவின. இந்த அமைப்பில், மாநில காங்கிரஸ் கட்சி கடந்த சில தினங்களுக்கு முன் இணைந்தது. அதைத் தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீரில் நடைபெறவுள்ள மாவட்ட வளா்ச்சி கவுன்சில் தோ்தலில் குப்கா் கூட்டமைப்பைச் சோ்ந்த கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இணைந்து போட்டியிட முடிவெடுத்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com