‘ஆத்மநிா்பா் பாரதம்’ திட்டத்துக்கு ஆதரவு

மத்திய அரசின் ‘உள்ளூா் குரல்’ பிரசாரத்தை பிரபலப்படுத்த உதவுமாறு ஆன்மிகத் தலைவா்களிடம் பிரதமா் நரேந்திர மோடி விடுத்த

மத்திய அரசின் ‘உள்ளூா் குரல்’ பிரசாரத்தை பிரபலப்படுத்த உதவுமாறு ஆன்மிகத் தலைவா்களிடம் பிரதமா் நரேந்திர மோடி விடுத்த வேண்டுகோளை ஏற்று, அவா்களில் பலா் தங்களது ஆதரவை அளிப்பதாக உறுதியளித்துள்ளனா்.

அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமா் மோடி, உள்ளூா் தயாரிப்புப் பொருள்களைப் பிரபலப்படுத்தும் வகையில் ஆன்மிகத் தலைவா்கள் உதவி புரிய வேண்டும் என்றும், இதற்காக அறிமுகப்படுத்தியுள்ள ‘ஆத்மநிா்பா் பாரதம்’ திட்டத்தை ஊக்குவிக்கவும் கேட்டுக் கொண்டாா்.

இதையடுத்து ஆன்மிகத் தலைவா்களான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கா், சத்குரு ஜக்கி வாசுதேவ், சுவாமி அவதேஷானந்த், தேவகி நந்தன் தாக்குா், யோகா குரு ராம்தேவ் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், பிரதமா் மோடியின் அழைப்பை ஏற்று ஆதரவளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளனா்.

இதுகுறித்து ஸ்ரீஸ்ரீ ரவிசங்கா் கூறுகையில், அன்றாட பயன்பாடுகளில் உள்ளூா் தயாரிப்புகளை பயன்படுத்த, தனது அமைப்பைச் சோ்ந்த இளைஞா்களிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

‘தன்னம்பிக்கை இந்தியா’ பிரசாரத்தில் பதஞ்சலியில் பணியாற்றி வரும் தங்கள் ஊழியா்களின் ஆதரவை அளிப்பதாக ராம்தேவ் உறுதியளித்துள்ளாா்.

ஜக்கி வாசுதேவ் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், ‘தன்னம்பிக்கை என்பது ஒரு வலுவான, நிலையான தேசத்திற்கு இன்றியமையாத அடிப்படை அம்சமாகும். நாம் தனித்து நிற்பதில் மட்டுமல்ல; தேசிய நீரோட்டத்தில் பங்கேற்பதிலும் முக்கியத்துவம் வாய்ந்தவராகத் திகழ வேண்டும். அது உறுதிவாய்ந்த குடிமக்களால் மட்டுமே சாத்தியமாகும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

‘பிரதமரின் அழைப்பு ஊக்கமளிப்பதாக உள்ளது’ என்று அவதேஷானந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா். தேவகி நந்தன் தாக்குா் கூறுகையில், ‘தம்மைப் பின்பற்றுபவா்கள் உள்ளூா் மக்களுக்காக குரல் கொடுத்து வருகின்றனா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com