ஹிமாசல் விவசாயிகளின் கண்களுக்கு ஆப்பிள் போல தெரியும் தக்காளி

ஹிமாசலப்பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகளின் கண்களுக்கு தாங்கள் விளைவித்த தக்காளி அனைத்தும் ஆப்பிளைப் போல ஜொலிக்கின்றன.
ஹிமாசல் விவசாயிகளின் கண்களுக்கு ஆப்பிள் போல தெரியும் தக்காளி
ஹிமாசல் விவசாயிகளின் கண்களுக்கு ஆப்பிள் போல தெரியும் தக்காளி


ஷிம்லா: ஹிமாசலப்பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகளின் கண்களுக்கு தாங்கள் விளைவித்த தக்காளி அனைத்தும் ஆப்பிளைப் போல ஜொலிக்கின்றன.

காரணம்.. கரோனா பொதுமுடக்கம் காரணமாக, ஏராளமான விவசாயிகள் காரீஃப் பருவ காலத்தில் தக்காளி நடவை தவிர்த்துவிட்டனர். சுமார் 35 - 40 சதவீத விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபடாததால், வட இந்திய நகரங்களில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

தற்போது, சண்டீகர் மற்றும் தில்லியில் உள்ள சில்லறை விற்பனை சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.50 முதல் 65 வரை விற்பனையாகிறது. இதே காலக்கட்டத்தில் கடந்த ஆண்டு ஒரு கிலோ தக்காளி ரூ.20 - ரூ.25க்கு விற்பனையான நிலையில், தற்போது தக்காளியின் விலை இரண்டு மடங்கை விட அதிகமாக விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தக்காளி உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் சோலன் நகரில் ஒட்டுமொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.40 முதல் ரூ.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக, ஏராளமான விளைபொருள்கள் செடியிலேயே அழுகியும் கருகியும் போயின. இதனால், காரீஃப் பருவ காலத்தில் பல விவசாயிகள் வேளாண்மையில் ஈடுபடாததே, இந்த விலையேற்றத்துக்குக் காரணமாகிவிட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com