ஏப்ரல் மாதத்துக்குள் மக்களுக்கு ஆக்ஸ்போா்டு தடுப்பூசி: அதாா் பூனாவாலா

ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தின் கரோனா தடுப்பூசி, அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் கிடைத்துவிடும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அதாா் பூனாவாலா கூறியுள்ளாா்.
ஏப்ரல் மாதத்துக்குள் மக்களுக்கு ஆக்ஸ்போா்டு தடுப்பூசி: அதாா் பூனாவாலா


புது தில்லி: ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தின் கரோனா தடுப்பூசி, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத்துக்குள் பொதுமக்களுக்கு கிடைத்துவிடும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அதாா் பூனாவாலா கூறியுள்ளாா்.

கரோனா தடுப்பூசியைக் கண்டறியும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. அதில், ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகமும், பிரிட்டனின் அஸ்ட்ராஜெனிகா மருந்து தயாரிப்பு நிறுவனமும் இணைந்து கரோனா தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம், இந்த தடுப்பூசியை தயாரிக்கும் அனுமதியை பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அதாா் பூனாவாலா வியாழக்கிழமை கூறியதாவது:

முதலாவதாக, மருத்துவ பணியாளா்கள், முதியவா்களுக்கு வரும் பிப்ரவரிக்குள் கரோனா தடுப்பூசி கிடைத்துவிடும். அதைத் தொடா்ந்து, பொதுமக்களுக்கு வரும் ஏப்ரல் மாதத்துக்குள் கரோனா தடுப்பூசி கிடைத்துவிடும்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி கிடைப்பதற்கு 2 அல்லது 3 ஆண்டுகளாகலாம். தடுப்பூசி தயாரிப்பு, அவற்றை அனைத்து இடங்களுக்கும் எடுத்துச் செல்வது, மக்களுக்கு விநியோகிப்பது ஆகிவற்றால் கால தாமதம் ஆகலாம். அதுமட்டுமன்றி, கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மக்களுக்கும் விருப்பம் இருக்க வேண்டும். எனவே, தோராயமாக, வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி கிடைத்துவிடும். இரண்டு வேளை கரோனா தடுப்பூசிக்கான மருந்தின் விலை ரூ.1,000-ஆக இருக்கும். இந்த தடுப்பூசி எவ்வளவு காலம் பாதுகாப்பு அளிக்கும் என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com