தெலங்கானாவில் ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கரோனா பாதிப்பு

தெலங்கானாவில் இன்று கரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து பதிவாகியுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவிலும் தொற்று பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், 

புதிதாக 925 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 2.62 லட்சமாக உயர்ந்துள்ளது. அதேசமயம் ஒரேநாளில் 1.367 பேர் குணமடைந்துள்ளதை அடுத்து மொத்தம் 2.49 லட்சம் பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். 

தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டு 12,070 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிதாக 3 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து, மொத்தம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,426-ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இறப்பு விகிதம் 0.54-ஆகப் பதிவாகியுள்ளது. 

ஒரேநாளில் 42,077 பரிசோதனைகள் மேற்கொண்ட நிலையில், இதுவரை மாநிலத்தில் மொத்தம் 50 லட்சம் பரிசோதனைகள் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com