தில்லியில் கரோனா: மகாராஷ்டிரத்திலிருந்து ரயில், விமான சேவைகள் நிறுத்தமா?

கரோனா தொற்று அதிகரித்து வரும் தில்லிக்கு ரயில் மற்றும் விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவது குறித்து மகாராஷ்டிர அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தில்லியில் கரோனா: மகாராஷ்டிரத்திலிருந்து ரயில், விமான சேவைகள் நிறுத்தமா? (கோப்புப்படம்)
தில்லியில் கரோனா: மகாராஷ்டிரத்திலிருந்து ரயில், விமான சேவைகள் நிறுத்தமா? (கோப்புப்படம்)

கரோனா தொற்று அதிகரித்து வரும் தில்லிக்கு ரயில் மற்றும் விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவது குறித்து மகாராஷ்டிர அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக அரசு இதனை செய்யவுள்ளது.

இது தொடர்பாக பேசிய மகாராஷ்டிர அரசின் முதன்மைச் செயலாளர் சஞ்சய் குமார், மாநிலத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டமாக ஆலோசனை நடத்தப்பட்டது. 

அதில் தில்லிக்கு ரயில் மற்றும் விமானப் போக்குவரத்தை நிறுத்துவது குறித்தும், தில்லியிலிருந்து வரும் ரயில் மற்றும் விமானங்களுக்கு தற்காலிகமாக தடை விதிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. எனினும் ஆலோசனையில் இதுவரை இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்று கூறினார்.

கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள மாநிலங்களிலிருந்து மகாராஷ்டிரத்திற்கு மக்கள் வருவதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற ஆலோசனையில் விவாதிக்கப்பட்டது.

மகாராஷ்டிரத்தில் நேற்றைய (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி 5,640 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 17,68,695 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 46,511-ஆக அதிகரித்துள்ளது.

இதேபோன்று தில்லியில் புதிதாக 6,608 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. மொத்த பாதிப்பு 5.17 லட்சமாகவும், பலியானோர் எண்ணிக்கை 8,159 ஆகவும் அதிகரித்துள்ளது.

தில்லியில் குளிர்காலத்தையொட்டி கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளொன்றுக்கு 15 ஆயிரமாக கூட பதிவாகலாம் என்று தேசிய நோய்க்கட்டுப்பாட்டு மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com