மதுரை தியாகராசர் கல்வியியல் கல்லூரியில் வலையரங்கம்

மதுரை தியாகராசர் கல்வியியல் கல்லூரியில், வளர்ந்து வரும் மாணவ ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் கணித கழகத்தால் வலையரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பான முறையில் நடைபெற்றது.
மதுரை தியாகராசர் கல்வியியல் கல்லூரியில் வலையரங்கம்
மதுரை தியாகராசர் கல்வியியல் கல்லூரியில் வலையரங்கம்

மதுரை தியாகராசர் கல்வியியல் கல்லூரியில், வளர்ந்து வரும் மாணவ ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் கணித கழகத்தால் வலையரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பான முறையில் நடைபெற்றது.

இதில் தில்லி பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கணிதத்தை சுவாரஸ்யமாக கற்பிப்பதற்கும், மதிப்பிடுவதற்கும் தேவையான  புதிய கல்வி மென்பொருள் பயன்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.

மதுரை தியாகராசர் கல்வியியல் கல்லூரியில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை வலையரங்கம் நடைபெற்றது. 

இதில் உதவிப் பேராசிரியர் எஸ். அன்பழகன் அமைப்புச் செயலாளராகவும், உதவிப் பேராசிரியர் டி. ஞானபிரகாசம் இணை செயலாலராகவும், உதவிப் பேராசிரியர் கே. குமரேசன் அவைகூட்டுனராகவும் செயல்பட்டனர். 

மாணவ ஆசிரியை ஏ. அபிநயாவால் தொகுத்து வழங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், மாணவ ஆசிரியைகளான ஏ.சபானா பானு வரவேற்புரையையும், ஜெ. ஜெபசஸ்டீனா நன்றியுரையையும் வழங்கினர்.

தில்லி பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் டாக்டர் வினோத் குமார் கன்வாரியா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.  நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,

''கணிதத்தை கற்பிக்க மென்பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் மாணவர்களின் கவனத்தை ஈர்க்க முடியும். வகுப்பிலேயே மாணவர்களை மதிப்பீடு செய்ய அடிக்கடி கேள்விகளைக் கேட்க வேண்டும்'' என்று கூறினார்.

மேலும் கணித வகுப்பில் பயன்படுத்த பல கருவிகளை அவர் பரிந்துரைத்தார்.  இது மாணவ ஆசிரியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com