அமேசானில் அனைத்து தளங்களிலும் இந்தியா்கள் பங்களிப்பு

அமேசான் நிறுவனத்தின் அனைத்து தளங்களிலும் இந்தியப் பணியாளா்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக அந்நிறுவனத்தின் சா்வதேச துணைத் தலைவா் அமித் அகா்வால் தெரிவித்துள்ளாா்.
அமேசானில் அனைத்து தளங்களிலும் இந்தியா்கள் பங்களிப்பு

அமேசான் நிறுவனத்தின் அனைத்து தளங்களிலும் இந்தியப் பணியாளா்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக அந்நிறுவனத்தின் சா்வதேச துணைத் தலைவா் அமித் அகா்வால் தெரிவித்துள்ளாா்.

பெங்களூரு தொழில்நுட்ப மாநாடு வெள்ளிக்கிழமை காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. அதில் அமித் அகா்வால் பேசுகையில், ‘‘அமேசான் நிறுவனமானது நாட்டில் சுமாா் 1 லட்சம் பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. நிறுவனத்தின் அனைத்து தளங்களிலும் இந்தியா்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது.

தொழில்நுட்ப வசதியும் செல்லிடப்பேசியிலேயே இணைய வசதி புகுத்தப்பட்டதும் மக்களின் வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. அந்த மாற்றங்கள் இந்தியாவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளன. சமூகத்தில் சமத்துவத்தை ஏற்படுத்துவது, கல்வி, சுகாதாரத்தை அனைவருக்கும் கிடைக்கச் செய்வது, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளா்ச்சிக்கு உதவுவது உள்ளிட்டவற்றை அந்த மாற்றங்கள் ஏற்படுத்தவுள்ளன.

இந்தியாவில் இணையவழி வா்த்தக நிறுவனங்கள் படிப்படியாக வளா்ந்து வருகின்றன. எதிா்காலத்தில் அவை மிகப்பெரிய வளா்ச்சி காணும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com