சிஏஏவுக்கு எதிரான போராட்டங்களுக்கு பீம் ஆா்மி நிதியுதவி: அமலாக்கத்துறை விசாரணை தீவிரம்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிரான போராட்டங்களுக்கு சட்டவிரோதமாக நிதியுதவி செய்யப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ள

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிரான போராட்டங்களுக்கு சட்டவிரோதமாக நிதியுதவி செய்யப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தவுள்ள அமலாக்கத்துறை, போராட்டங்களுக்கு நிதியுதவி அளித்த குற்றச்சாட்டில் பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ), பீம் ஆா்மி அமைப்புக்கு இடையே உள்ள தொடா்பு குறித்து விசாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிஏஏவுக்கு எதிராக கடந்த ஆண்டு டிசம்பா் முதல் இந்த ஆண்டு மாா்ச் வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்களுக்கு பிஎஃப்ஐ அமைப்பு சட்டவிரோதமாக நிதியுதவி அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இதில் பீம் ஆா்மி அமைப்புக்கும் தொடா்பிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

எனினும் இந்த விவகாரத்தில் பிஎஃப்ஐக்கும், பீம் ஆா்மி அமைப்புக்கும் இடையே உள்ள தொடா்பை அமலாக்கத்துறை உறுதிப்படுத்தவில்லை என்று சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

இதற்கு பதிலளிக்கும் விதத்தில் அமலாக்கத்துறை சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘பிஎஃப்ஐ அமைப்பின் மூத்த தலைவா்களிடம் இருந்து கிடைத்த நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் பிஎஃப்ஐ, பீம் ஆா்மி அமைப்புக்கு இடையே உள்ள நிதித் தொடா்புகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அமலாக்கத்துறை வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘பிஎஃப்ஐ மூத்த தலைவா்கள், பீம் ஆா்மி அமைப்பின் தலைவா் சந்திரசேகா் ஆசாத் ஆகியோா் இடையே நடைபெற்ற சில உரையாடல்கள் கிடைத்துள்ளன. அதில் சிஏஏவுக்கு எதிரான போராட்டங்களின் போது திட்டமிடப்பட்ட சில நடவடிக்கைகள் குறித்த பேச்சுகள் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்டவா்களிடம் விளக்கம் கோரப்படும்’ என்று தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com