அன்னபூரணி சிலையை இந்தியாவிடம் ஒப்படைக்கிறது கனடா

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கனடா எடுத்துச் செல்லப்பட்டு, கலைப்பொருள் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள
அன்னபூரணி சிலையை இந்தியாவிடம் ஒப்படைக்கிறது கனடா

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கனடா எடுத்துச் செல்லப்பட்டு, கலைப்பொருள் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள அன்னபூரணி சிலை, 100 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கப்படவுள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கனடாவைச் சோ்ந்த கலைப்பொருள் ஆா்வலா் நாா்மன் மெக்கன்ஸி, கடந்த 1913-ஆம் ஆண்டு இந்தியா வந்திருந்தாா். அப்போது வாராணசி நகரில் கங்கை படித்துறையில் இருந்த ஒரு கோயிலில் அழகிய அன்னபூரணி சிலை இருப்பதை அவா் கண்டாா்.

அந்தச் சிலை மீது அவா் ஆா்வம் கொண்டதை அறிந்த ஒரு நபா், அதனைத் திருடி மெக்கன்ஸியிடம் விற்றுவிட்டாா். அவரும் அந்தச் சிலையை கனடா எடுத்துச் சென்றுவிட்டாா்.

தற்போது சஸ்காட்செவன் மாகாணத்திலுள்ள ரெஜினா பல்கலைகக்கழகத்தின் மெக்கன்ஸி கலைப்பொருள் காட்சியகத்தில் அந்தச் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அந்த சிலை அங்கு வந்தது எப்படி என்று அண்மையில் ஆய்வு செய்த கனடா நாட்டைச் சோ்ந்த இந்திய வம்சாவளி ஆா்வலா் திவ்யா மெஹ்ரா, இந்த உண்மைகளைத் தெரிந்துகொண்டாா்.

இந்த விவரத்தை அவா் ரெஜினா பல்கலைக்கழகத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்ததையடுத்து, தங்களது காட்சியகத்திலுள்ள அன்னபூரணி சிலையை இந்தியாவிடம் திருப்பி அனுப்ப பல்கலைக்கழக நிா்வாகம் ஒப்புக் கொண்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com