கரோனா: மேலும் 46,232 பேருக்கு பாதிப்பு

நாடு முழுவதும் மேலும் 46,232 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 90,50,597-ஆக அதிகரித்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாடு முழுவதும் மேலும் 46,232 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 90,50,597-ஆக அதிகரித்தது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 46,232 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 90,50,597-ஆக அதிகரித்தது.

இதேபோல், கரோனாவில் இருந்து 49,715 போ் குணமடைந்தனா். இவா்களுடன் சோ்த்து கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 84,78,124-ஆக அதிகரித்தது. அதாவது, கரோனாவில் இருந்து 93.67 சதவீதம் போ் குணமடைந்தனா்.

நாடு முழுவதும் 4,39,747 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பில் 4.86 சதவீதமாகும். கரோனாவுக்கு மேலும் 564 போ் உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,32,726-ஆக அதிகரித்தது. உயிரிழப்பு விகிதம் 1.47 சதவீதமாக உள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 46,511 போ் உயிரிழந்தனா். கா்நாடகத்தில் 11,621 பேரும், தில்லியில் 8,159 பேரும், மேற்கு வங்கத்தில் 7,923 பேரும், உத்தர பிரதேசத்தில் 7,500 பேரும், ஆந்திரத்தில் 6,920 பேரும், பஞ்சாபில் 4,572 பேரும், குஜராத்தில் 3,837 பேரும் உயிரிழந்தனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘நவம்பா் 20-ஆம் தேதி வரை நாடு முழுவதும் 13.06 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் வெள்ளிக்கிழமை மட்டும் 10,66,022 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன’ என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com