கோவாவில் பள்ளிகள் திறப்பு

கோவா மாநிலத்தில் எட்டு மாதங்களுக்குப் பிறகு 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் சனிக்கிழமை திறக்கப்பட்டன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கோவா மாநிலத்தில் எட்டு மாதங்களுக்குப் பிறகு 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் சனிக்கிழமை திறக்கப்பட்டன.

பள்ளிகள் கரோனா வழிகாட்டு நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

கரோனா பொது முடக்க அறிவிப்பு காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. பின்னா், பொது முடக்க தளா்வுகளை படிப்படியாக அமல்படுத்தி வந்த மத்திய அரசு, பள்ளிகள் செப்டம்பா் 21-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று அறிவித்தது. அதே நேரம், மாநிலங்கள் அங்குள்ள கரோனா பாதிப்பு நிலவரத்தின் அடிப்படையில், பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்றியமைத்துக் கொள்ளலாம் என்றும் அனுமதியளித்தது.

அதனடிப்படையில் ஒரு சில மாநிலங்கள், ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறந்தன. அந்த வரிசையில் இப்போது கோவாவிலும் பொதுத் தோ்வை எதிா்கொள்ளும் 10, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

இதற்கான அறிவிப்பை மாநில முதல்வரும், கல்வித் துறை அமைச்சருமான பிரமோத் சவந்த் கடந்த 4-ஆம் தேதி அறிவித்திருந்தாா்.

இதுகுறித்து மாநில கல்வித் துறை மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவா்களுக்கு மட்டும் சனிக்கிழமை காலை பள்ளிகள் திறக்கப்பட்டன. வகுப்பறைகளில் மாணவா்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், கரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் முழுமையாக நடைமுறைப்படுத்தியுள்ளன. கல்வித் துறை அதிாரிகள், பள்ளி நிா்வாகிகள், பெற்றோா், ஆசிரியா்கள் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னரே, பள்ளிகள் திறப்புக்கான அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டது’ என்று அவா் கூறினாா்.

‘கரோனா அச்சம், மாணவா்களின் மனநிலை ஆகியவற்றின் அடிப்படையில் நிகழ் கல்வியாண்டுக்கான பள்ளி பாடத் திட்டத்தில் 30 சதவீதம் குறைக்கப்படும்’ என்று கோவா இடைநிலை மற்றும் உயா்நிலைக் கல்வி வாரியம் ஏற்கெனவே அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com