விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்க அரசு தவறிவிட்டது: விவசாய சங்கம்

விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்க அரசு தவறிவிட்டதாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாரதிய கிஷான் யூனியன் அமைப்பு தெரிவித்துள்ளது.
விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்க அரசு தவறிவிட்டது: விவசாய சங்கம்

விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்க அரசு தவறிவிட்டதாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாரதிய கிஷான் யூனியன் அமைப்பு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுக்கு ஆதரவாக ஹரியாணா உள்ளிட்ட அண்டை மாநில விவசாயிகளும் தில்லி நோக்கி வாகனத்தில் பேரணியாக வந்து போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் டிகெய்ட் தெரிவித்ததாவது, விவசாயிகளின் பிரச்னைகளைக் கண்டறிய மத்திய அரசு தவறிவிட்டது. நாங்கள் தற்போது தில்லி வரை வந்துள்ளோம். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு கீழே விளைப்பொருள்களை விற்பனை செய்யக் கூடாது என்பதே எங்கள் கோரிக்கை என்று கூறினார்.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் சட்டமாக நிறைவேற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லி புராரி திடலில் விவசாயிகளின் போராட்டம் வலுத்துவருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com