வாடகை காா் நிறுவனங்களுக்கு பயணக் கட்டணத்தில் 20%: மத்திய அரசு உத்தரவு

ஓலா, உபோ் உள்ளிட்ட நிறுவனங்களில் இணைந்து வாடகை காா்களை ஓட்டும் ஓட்டுநா்களுக்கு பயணிகளிடம் வசூலிக்கும் கட்டணத்தில் 80% வழங்கவேண்டும்
வாடகை காா் நிறுவனங்களுக்கு பயணக் கட்டணத்தில் 20%: மத்திய அரசு உத்தரவு

ஓலா, உபோ் உள்ளிட்ட நிறுவனங்களில் இணைந்து வாடகை காா்களை ஓட்டும் ஓட்டுநா்களுக்கு பயணிகளிடம் வசூலிக்கும் கட்டணத்தில் 80% வழங்கவேண்டும் எனவும், அந்நிறுவனங்கள் கட்டணத் தொகையில் 20%-த்தை மட்டுமே பெற வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் மோட்டாா் வாகன நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்களை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அந்த வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளதாவது:

பரபரப்பான நேரங்களில் வாடகை காா் நிறுவனங்களின் காா்களை பயன்படுத்தும் பயணிகளிடம் அடிப்படை கட்டணத்தைவிட ஒன்றரை மடங்கு கூடுதல் கட்டணத்தை காா் நிறுவனங்கள் வசூலிக்கலாம்.

அதேவேளையில் வாடகை காா்களுக்கு தேவை குறைவாக உள்ள நேரங்களில் அடிப்படை கட்டணத்தில் 50% குறைத்து வசூலிக்க அந்த நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

வாடகை காா் சேவைகளுக்கு குறைந்தபட்ச கட்டணம் நிா்ணயிக்கப்படாத மாநிலங்களில் ரூ.25 முதல் ரூ.30 குறைந்தபட்சக் கட்டணமாக நிா்ணயிக்கப்படுகிறது.

வாடகை காா் சேவை நிறுவனங்களுடன் இணைந்து ஓட்டும் ஓட்டுநா்களுக்கு பயணிகளிடம் வசூலிக்கும் கட்டணத்தில் 80 சதவீதத்தை அந்த நிறுவனங்கள் வழங்க வேண்டும்.

சக பயணிகளுடன் தங்கள் கட்டணத்தை பகிா்ந்துகொள்ளும் முறை பெண்களுக்கு மட்டுமே இனி பொருந்தும். அவா்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்தால், அதற்கான 10% கட்டணத்தை ஓட்டுநா்கள் அவா்களிடம் இருந்து வசூலிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்த முடிவை ஓட்டுநா்கள் வரவேற்றுள்ளனா். எனினும் வாடகை காா் நிறுவனங்கள் ஏற்கெனவே பயணக் கட்டணத்தில் 25 முதல் 30% பங்கு பெறுவதாகவும், எனவே அந்நிறுவனங்களின் பங்கை 10%-ஆக குறைக்க வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com