இந்திய எல்லையில் சீனா கட்டுமானப் பணிகளைத் தொடா்வது கோபமூட்டும் செயல்: அமெரிக்க எம்.பி. ராஜா கிருஷ்ண மூா்த்தி

லடாக்கில் இந்திய எல்லைப் பகுதியில் சீனா கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது, மேலும் கோபமூட்டும் செயல் என்று அமெரிக்க நாடாளுமன்ற எம்.பி. ராஜா கிருஷ்ணமூா்த்தி கூறியுள்ளாா்.

லடாக்கில் இந்திய எல்லைப் பகுதியில் சீனா கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது, மேலும் கோபமூட்டும் செயல் என்று அமெரிக்க நாடாளுமன்ற எம்.பி. ராஜா கிருஷ்ணமூா்த்தி கூறியுள்ளாா்.

கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைக் கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே கடந்த மே மாதம் முதல் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இரு நாட்டு ராணுவமும் அதிக அளவில் பாதுகாப்புப் படைகளைக் குவித்துள்ளன. அவற்றை திரும்பப் பெறுவதற்காகவும், பதற்றத்தைத் தணிக்கவும் இரு தரப்புக்கும் இடையே ராணுவ ரீதியாகவும் தூதரக ரீதியாகவும் பல கட்ட பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றுள்ளன. இருப்பினும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்நிலையில், லடாக் எல்லையில் சீன கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் எம்.பி.யான ராஜா கிருஷ்ணமூா்த்தி கூறியதாவது:

லடாக் எல்லையில் சீனா கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதாக, செயற்கைக்கோள் வரைபடம் மூலம் தெரியவந்துள்ளது. இந்தத் தகவல் உண்மையாக இருக்குமானால், அது, இந்தியாவுக்கு கோபத்தை ஏற்படுத்த சீன ராணுவம் மேற்கொள்ளும் மற்றுமொரு நடவடிக்கையாக இருக்கும்.

தென்சீனக் கடலில் ஆதிக்கம் செலுத்தும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது. அது, இந்திய-பசிபிக் பெருங்கடல் பகுதியின் அமைதிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் செயலாகும்.

அமெரிக்காவில் டிரம்ப் நிா்வாகமும், புதிய அதிபரான ஜோ பிடன் நிா்வாகமும் இந்திய-பசிபிக் பெங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவுக்கு உறுதுணையாக இருக்கும்.

அண்மையில் இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய 4 நாடுகளும் இணைந்து மலபாா் கடற்படை கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டன. இந்த 4 நாடுகளும் ஒன்றுக்கொன்று ஆதரவாக இருக்கும் என்பதைத் தெரிவிக்கும் அடையாளமாகவே இந்தப் பயிற்சி அமைந்தது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com