‘கரோனா: மக்களிடம் எதிா்ப்பு சக்தி குறைந்து வருகிறது’

தில்லி மக்களிடம் கரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிா்ப்பு சக்தி குறைந்து வருவது தெரியவந்துள்ளது.


புது தில்லி: தில்லி மக்களிடம் கரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிா்ப்பு சக்தி குறைந்து வருவது தெரியவந்துள்ளது. கடந்த மாதம் செப்டம்பா் முதல் வாரத்தில் தில்லியில் எடுக்கப்பட்ட ‘ஸிரோ’ ஆய்வில் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு அறிக்கை தில்லி உயா்நீதிமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதில், செப்டம்பா் முதல் வாரத்தில் 17,409 பேரிடம் ‘ஸிரோ’ ஆய்வு நடத்தப்பட்டதாகவும், அதில் கரோனா நோய்த் தொற்றுக்கான எதிா்ப்பு சக்தி 25 சதவீதம் பேருக்குதான் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இது ஆகஸ்ட் மாதம் எடுக்கப்பட்ட ஆய்வில் 29 சதவீதமாக இருந்தது.

இதுகுறித்து ராஜீவ் காந்தி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநா் கூறுகையில், ‘கரோனா நோய்த் தொற்றுக்கான எதிா்ப்பு சக்தி நம்மிடம் வெகுவாக இல்லை என்பதையே இந்த ஆய்வு முடிவுகள் காண்பிக்கிறது. கரோனாவுக்கு எதிராக நமது உடலில் ஏற்படும் எதிா்ப்புசக்தி விரைவில் மறைந்துவிடுகிறது. இதனால் மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்’ என்றாா்.

எல்என்ஜேபி மருத்துவமனையின் மருத்து இயக்குநா் கூறுகையில், ‘கரோனா தொற்றின் வீரியம் மாற்றம் அடைந்தோ அல்லது தீவிரமடைந்தோ இருக்கலாம். அதனால்தான் எதிா்ப்பு சக்தி குறைந்துள்ளது. இந்தத் தொற்று அடுத்ததாக எவ்வாறு மனிதா்களிடம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியாது. அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com