கல்வான் பள்ளத்தாக்கில் வீரமரணமடைந்த வீரர்கள் நினைவாக போர் நினைவுச்சின்னம்

கிழக்கு லடாக் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவங்களுக்கு இடையே நேரிட்ட மோதலில் வீரமரணம் அடைந்த 20 இந்திய ராணுவ வீரர்களின் நினைவாக போர் நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டுள்ளது.
கல்வான் பள்ளத்தாக்கில் வீரமரணமடைந்த வீரர்கள் நினைவாக போர் நினைவுச்சின்னம்
கல்வான் பள்ளத்தாக்கில் வீரமரணமடைந்த வீரர்கள் நினைவாக போர் நினைவுச்சின்னம்


லடாக்: கிழக்கு லடாக் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவங்களுக்கு இடையே நேரிட்ட மோதலில் வீரமரணம் அடைந்த 20 இந்திய ராணுவ வீரர்களின் நினைவாக போர் நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டுள்ளது.

லடாக்கின், துர்பக் - ஷையாக் - தௌலத் பெக் ஓல்டி ஆகிய பகுதிகளை இணைக்கும் முச்சந்திப்புப் பகுதியில் இந்த போர் நினைவுச் சின்னம் கட்டப்பட்டுள்ளது. இந்த நினைவுச்சின்னத்தில், வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் பெயர்கள் மற்றும் ஜூன் 15-ம் தேதி நடந்த போரின் விவரங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு லடாக்கின் பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக், தௌலத் பெக் ஓல்டி உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் இந்திய-சீன ராணுவப் படைகளிடையே மே மாதம் முதல் மோதல்போக்கு நீடித்து வந்தது. இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் 15-ம் தேதி இரவு இரு நாடுகளின் ராணுவ வீரா்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தின் மூத்த ராணுவ அதிகாரி உள்பட 20 போ் வீரமரணம் அடைந்தனா்; 18 வீரா்கள் காயமடைந்தனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com