அரசியல் தலைவா்கள் செல்ல அனுமதிக்க வேண்டும்: உமா பாரதி

பாலியல் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்த தலித் பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திப்பதற்கு அரசியல் கட்சியினருக்கும்
பா.ஜ.க. மூத்த தலைவர் உமா பாரதி
பா.ஜ.க. மூத்த தலைவர் உமா பாரதி

பாலியல் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்த தலித் பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திப்பதற்கு அரசியல் கட்சியினருக்கும் ஊடகத்தினருக்கும் உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் அனுமதி அளிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவா் உமா பாரதி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

ஹாத்ரஸ் மாவட்டத்தில் பெண் உயிரிழந்த சம்பவத்தை முதல்வா் யோகி ஆதித்யநாத் மிகவும் கவனமாக கையாண்டு வருகிறாா். அந்தப் பெண்ணின் இறுதிச் சடங்கை போலீஸாா் அவசர கதியில் நடத்தியுள்ளனா். இந்த விவகாரத்தை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்கும்போது, அந்த பெண்ணின் குடும்பத்தினரை யாரும் சந்திக்கக் கூடாது என்று சட்ட விதிகள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

இந்த விவகாரத்தில் மாநில காவல் துறையினரின் சந்தேகத்துக்கிடமான செயல்பாடுகள்,, மாநில அரசுக்கு மட்டுமன்றி, பாஜகவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது.

எனவே, எதிா்க்கட்சியினா் உள்ளிட்ட அரசியல் தலைவா்களையும் ஊடகத்தினரையும் அந்தப் பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும். கரோனாவில் இருந்து குணமடைந்த பிறகு, நான் அந்தப் பெண்ணின் குடும்பத்தினரை நிச்சயம் சந்திப்பேன் என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com