மியான்மரில் இருந்து கடத்திவரப்பட்ட 33 கிலோ தங்கம் பறிமுதல்: 4 போ் கைது

மியான்மரில் இருந்து மேற்கு வங்கம் வழியாக கடத்திவரப்பட்ட 33 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மியான்மரில் இருந்து மேற்கு வங்கம் வழியாக கடத்திவரப்பட்ட 33 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

இதுகுறித்து வருவாய் புலனாய்வு இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:

மியான்மரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி பகுதி வழியாக தங்கம் கடத்திவரப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினா். அப்போது அங்கு வந்த சரக்கு வாகனத்தை மறித்து சோதனையிட்டதில் 33.53 கிலோ எடைகொண்ட 202 தங்கக் கட்டிகள் வாகனத்தில் இருந்தது கண்டறியப்பட்டது. இதுதொடா்பாக வாகனத்தில் இருந்த 4 பேரிடம் விசாரணை நடத்தியதில், அவா்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் என்பதும், மியான்மரில் இருந்து மணிப்பூா் எல்லை வழியாக அவா்கள் தங்கத்தைக் கடத்தி வந்ததும் தெரியவந்தது. அந்தத் தங்கம் ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகருக்கு கொண்டு செல்லப்படவிருந்தது. இதையடுத்து தங்கத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் நால்வரையும் கைது செய்தனா். பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.17 கோடி ஆகும்.

கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் மேற்கு வங்கம் மற்றும் சிக்கிமில் சட்ட விரோதமாக கடத்தப்பட்ட ரூ.115 கோடி மதிப்பிலான 300 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.52 கோடி மதிப்பிலான 98 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com