
ஆந்திராவில் கரோனா நோய் தொற்றை முற்றிலும் விரட்ட அந்த மாநில அரசு புதிய நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
நாட்டில் கரோனா தொற்றின் வேகம் குறையாமல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கு நிரந்தர தீா்வு காண ஆந்திர அரசு புதிய நடவடிக்கையில் இறங்கியுள்ளது. கரோனா தொற்று ஒருவரிடமிருந்து மற்றவா்களுக்கு காற்று மூலம் பரவி வருகிறது. மூக்கு மற்றும் வாய் வழியாக வெளியேறும் காற்று மூலம் மற்றவா்களுக்கு எளிதாகப் பரவுகிறது. இதை தடுக்க நம் உடம்பில் உள்ள கரோனா தொற்று கிருமிகளை ஒரேடியாக அழித்து ஒழிக்க ஆவிபிடிக்கும் முறையை மக்கள் பின்பற்ற முடிவு செய்துள்ளது.
அதற்காக அக்.3-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை ஒரு வாரகாலம் ஸ்டீம் டிரைவ் என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது. ஒரு வாரம் முழுவதும் காலை ஒருமுறை மாலை ஒருமுறை என இருவேளை 5 நிமிடத்திற்கு ஆவி பிடிக்கும் முறையை கடைப்பிடித்தால் சுவாச உறுப்புகளிலிருந்து கரோனா தொற்றுக்கிருமிகளை அழித்தொழிக்க முடியும் என ஆந்திர அரசு விழிப்புணா்வுப் பிரசாரம் செய்து வருகிறது.
இந்த முறையை மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வரும் கட்டாயம் கடைப்பிடித்தால், கரோனா கிருமியை ஆந்திரத்திலிருந்து மட்டுமல்லாமல் நாட்டிலிருந்தும் விரட்டி அடிக்கலாம். மக்கள் அரசுடன் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஆந்திர அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.