ஹாத்ரஸ்: 'பாதிக்கப்பட்ட குடும்பத்தை என் இல்லத்திற்கு அழைத்துச் செல்கிறேன்'

ஹாத்ரஸில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 'ஒய்' (Y) பிரிவு பாதுகாப்பு அளிக்க வேண்டும் அல்லது பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை எனது இல்லத்திற்கு அழைத்துச் சென்று பாதுகாப்பு அளிக்கிறேன்
ஹாத்ரஸ் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்த பீம் ஆர்மித் தலைவர் சந்திரசேகர் ஆசாத்
ஹாத்ரஸ் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்த பீம் ஆர்மித் தலைவர் சந்திரசேகர் ஆசாத்

ஹாத்ரஸ் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்த பீம் ஆர்மித் தலைவர் சந்திரசேகர் ஆசாத், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தை தமது இல்லத்திற்கு அழைத்துச்சென்று பாதுகாப்பு அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் பகுதியில் பட்டியலினத்தை சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஆதிக்க சமூகத்தினரால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். 

அவரது குடும்பத்தினரை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறிய நிலையில், மீம் ஆர்மித் தலைவர் சந்திரசேகர் ஆசாத்தும் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

முன்னதாக தமது கட்சி தொண்டர்களுடன் தில்லியிலிருந்து உத்தரப்பிரதேசம் நோக்கி பேரணியாகச் சென்றார்.

பின்னர் ஹாத்ராஸ் பகுதியில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்ற சந்திரசேகர் ஆசாத், இளம்பெண்ணின் பெற்றோர்களை அரவணைத்து ஆறுதல் கூறினார்.

பின்னர் பேசிய அவர், ''பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 'ஒய்' (Y) பிரிவு பாதுகாப்பு அளிக்க வேண்டும் அல்லது பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை எனது இல்லத்திற்கு அழைத்துச் சென்று பாதுகாப்பு அளிக்கிறேன். அவர்களின் பாதுகாப்பிற்கு இங்கு உத்திரவாதம் இல்லை'' என்று கூறினார்.

மேலும், ''இளம்பெண் கூட்டுப்பாலியல் விவகாரத்தை ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில் விசாரிக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச அரசை வலியுறுத்துகிறோம்.

'ஒய்' (Y) பிரிவு பாதுகாப்பு நடிகைகளுக்கு வழங்க அனுமதிக்கப்படும் நிலையில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்க்கு ஏன் வழங்கக்கூடாது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு பெறுவதற்காக சட்டபேரவையிலும் குரல் கொடுப்பேன்'' என்று சந்திரசேகர் ஆசாத் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com