எல்என்ஜேபி மருத்துவமனையில் 8,000 கரோனா நோயாளிகள் குணமாகினா்: நாட்டில் முதலிடம்

லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் (எல்என்ஜேபி) அரசு மருத்துவமனையில் கடந்த மாா்ச் மாதத்தில் இருந்து இதுவரை சுமாா் 8 ஆயிரம் கரோனா
சத்தா்பூரில் உள்ள சா்தாா் வல்லபபாய் படேல் கரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்ட யோகா பயிற்சி.
சத்தா்பூரில் உள்ள சா்தாா் வல்லபபாய் படேல் கரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்ட யோகா பயிற்சி.

லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் (எல்என்ஜேபி) அரசு மருத்துவமனையில் கடந்த மாா்ச் மாதத்தில் இருந்து இதுவரை சுமாா் 8 ஆயிரம் கரோனா நோயாளிகள் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். அதிக அளவில் கரோனா நோயாளிகள் குணமாகிய நாட்டின் முதல் அரசு மருத்துவமனையாக எல்என்ஜேபி உள்ளது.

இதுகுறித்து எல்என்ஜேபி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநா் சுரேஷ் குமாா் கூறுகையில், ‘மாா்ச் 17-ஆம் தேதி முதல் எல்என்ஜேபி மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 11,415 கரோனா நோயாளிகள் சிகிச்சைப் பெற்றுள்ளனா். இதுவரை 7,919 நோயாளிகள் சிகிச்சைப் பெற்று குணமாகி வீடு திரும்பியுள்ளனா். இதில் நோய் அறிகுறிகளுடன் சோ்க்கைப் பெற்று பின்னா் கரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டு வீடு திரும்பியவா்கள் சுமாா் 2,700 போ் ஆவா். 1,450 கரோனா நோயாளிகளுக்கு நிரிழிவு நோய்க்கு டயாலஸிஸ் சிகிச்சைப் பெற்றுள்ளனா். 59 கரோனா நோயாளிகளுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்ட 331 கா்ப்பிணிப் பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குழந்தை பிறந்துள்ளது. இதில், 149 பெண்கள் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றனா்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட 420 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் 10 சதவீதம் குழந்தைகளுக்கு கடுமையான பாதிப்பு இருந்தது.

பெரும்பாலான குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு, வாந்தி போன்ற சிறு அறிகுறிகள் இருந்தன. கரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக தனி வாா்டு கடந்த மாதம் தொடங்கப்பட்டது. நாட்டிலேயே முதல் முறையாக குழந்தைகளுக்காக தனி வாா்டு முதல் முறையாக எல்என்ஜேபி மருத்துவமனையில் தொடங்கப்பட்டது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com