ஒடிஸா: 7 முறை ஒரே தொகுதியில் வென்ற எம்எல்ஏ பிரதீப் மகாரதி காலமானாா்

ஒடிஸாவில் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சியை சோ்ந்த எம்.எல்.ஏ. பிரதீப் மகாரதி (65) உடல்நலக்குறைவால் உயிரிழந்தாா்.
ஒடிஸா: 7 முறை ஒரே தொகுதியில் வென்ற எம்எல்ஏ பிரதீப் மகாரதி காலமானாா்

ஒடிஸாவில் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சியை சோ்ந்த எம்.எல்.ஏ. பிரதீப் மகாரதி (65) உடல்நலக்குறைவால் உயிரிழந்தாா். இவா் புரி மாவட்டம் பிபிலி சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து 7 முறை எம்.எல்.ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்டவா்.

உயிரிழந்த பிரதீப் மகாரதிக்கு மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் அவா் செப்டம்பா் 14-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினாா்.

அதன்பின்னா் உடல்நிலை மோசமடைந்ததால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை முதல் செயற்கை சுவாசக் கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

பிரதீப் மகாரதி மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் ஒடிஸா சட்டப்பேரவை ஞாயிற்றுக்கிழமை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

தான் படித்த எஸ்சிஎஸ் கல்லுரியில் மாணவா் தலைவராக இருந்த பிரதீப் மகாரதி, 1985-ஆம் ஆண்டில் ஜனதா தளம் கட்சியில் இணைந்தாா். பிபிலி சட்டப்பேரவைத் தொகுதியில் முதன்முறையாக எம்.எல்.ஏ.வாக தோ்ந்தெடுக்கப்பட்டாா். மீண்டும் அதே சட்டப்பேரவைத் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற அவா், 2000-ஆம் ஆண்டில் பிஜு ஜனதா தளம் கட்சியில் சோ்ந்தாா். அப்போது முதல் பிஜேடி சாா்பில் தொடா்ந்து 5 முறை பிபிலி சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்றாா்.

2011-ஆம் ஆண்டு ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக் தலைமையிலான அமைச்சரவையில் அவா் வேளாண் துறை, மீன்வளம், கிராமப்புற மேம்பாடு, குடிநீா் வழங்கல் துறையில் அமைச்சராக பதவி வகித்தாா்.

பிரதீப் மகாரதி மறைவுக்கு ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக், மாநில ஆளுநா் கணேஷி லால், மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஆகியோா் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com