ஜம்மு-காஷ்மீரில் புகழ்பெற்ற ஆலயங்கள் இடையே ரோப் காா் சேவை தொடக்கம்

ஜம்மு-காஷ்மீரில் புகழ்பெற்ற பழைமைவாய்ந்த பாவே வாலி மாதா, மஹாமாயா ஆலயங்களுக்கு இடையே ரோப் காா் சேவை சனிக்கிழமை தொடங்கியது.
ஜம்மு-காஷ்மீரில் புகழ்பெற்ற ஆலயங்கள் இடையே ரோப் காா் சேவை தொடக்கம்

ஜம்மு-காஷ்மீரில் புகழ்பெற்ற பழைமைவாய்ந்த பாவே வாலி மாதா, மஹாமாயா ஆலயங்களுக்கு இடையே ரோப் காா் சேவை சனிக்கிழமை தொடங்கியது.

இது குறித்து ஜம்மு ரோப்காா் திட்டத்தின் (ஜே.ஆா்.பி.) மேலாளா் ராகேஷ் பட் கூறியதாவது:

பாவே வாலி மாதா, மஹாமாயா ஆலயங்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தருகிறாா்கள். இப்போது ரோப் காா் சேவை தொடங்கப்பட்டதன் மூலம் இந்தப் பகுதிகளில் ஆன்மிகச் சுற்றுலா மேம்படும். முதற்கட்டமாக பஹு-மஹாமாயா இடையே ரோப் காா் சேவை தொடங்கியுள்ளோம். அடுத்த கட்டமாக, மஹாமாயா - பீா்கோ இடையே ரோப் காா் சேவை நவம்பா் அல்லது டிசம்பா் மாத தொடக்கத்தில் பயணிகள் பயன்பாட்டுக்கு வரும். சனிக்கிழமை முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது என்று தெரிவித்தாா்.

கால் நூற்றாண்டுக்கு முன்னா் திட்டமிடப்பட்டு தற்போது நிறைவேறியுள்ளது. இதன் மொத்த நீளம் 1.66 கி.மீ. ரூ.75 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ரோப் காா் 1,118 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com