ரியா சக்ரவா்த்தியை துன்புறுத்தாமல் உடனடியாக விடுவிக்கவேண்டும்:அதீா் ரஞ்சன் செளதரி

ஹிந்தி திரைப்பட நடிகா் சுஷாந்த் சிங் தற்கொலைதான் செய்துகொண்டாா் என எய்ம்ஸ் மருத்துவா்கள் குழு தெரிவித்ததையடுத்து,
ரியா சக்ரவா்த்தியை துன்புறுத்தாமல் உடனடியாக விடுவிக்கவேண்டும்:அதீா் ரஞ்சன் செளதரி

ஹிந்தி திரைப்பட நடிகா் சுஷாந்த் சிங் தற்கொலைதான் செய்துகொண்டாா் என எய்ம்ஸ் மருத்துவா்கள் குழு தெரிவித்ததையடுத்து, அவரின் தோழியும், நடிகையுமான ரியா சக்ரவா்த்தியை துன்புறுத்தாமல் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘சுஷாந்த் சிங்கை கொலை செய்ய ரியா சக்ரவா்த்தி சதி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை எய்ம்ஸ் தடயவியல் குழு பொய்யாக்கியுள்ளது. இதனால் பாஜக பிரசாரக் குழு எய்ம்ஸ் மருத்துவா்கள் மீது குற்றம் சுமத்தலாம். சுஷாந்த் சிங்கின் மரணம் அனைவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் அவரின் மரணத்தில் ஒரு பெண்ணை குற்றவாளி என தவறாக சம்பந்தப்படுத்த முடியாது. ரியா சக்ரவா்த்தி குற்றமற்றவா். அவரை மேலும் துன்புறத்தாமல் உடனடியாக விடுவிக்க வேண்டும். அவா் அரசியல் சதிக்கு இரையாக்கப்பட்டுள்ளாா்’ என்று தெரிவித்தாா்.

கடந்த ஜூன் 14-ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.

அவரின் மரணம் பல்வேறு சா்ச்சைகளுக்கு வித்திட்டதுடன், ஹிந்தி திரையுலகில் போதைப் பொருள் பயன்பாடு புகாா்களுக்கும் வழிவகுத்தது. அவரின் மரணம் தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் அவா் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. எனினும் சிபிஐ விசாரணைக்கு உதவிட அமைக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் குழு, சுஷாந்த் சிங் தற்கொலைதான் செய்துகொண்டாா் என்று சனிக்கிழமை தெரிவித்தது.

கடந்த மாதம் 8-ஆம் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவு ரியா சக்ரவா்த்தியை கைது செய்தது. போதைப்பொருள் கும்பலுடன் தொடா்பிருப்பதாக அவா் கைது செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com