88-ஆவது ஆண்டு விழா: இந்திய விமானப் படை சாகச ஒத்திகை

உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாதிலுள்ள ஹிண்டன் படைத்தளத்தில் இந்திய விமானப் படையின் 88-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, விமானப் படை வீரர்களின் சாகச ஒத்திகை
இந்தியாவில் உருவாக்கப்பட்ட இலகு ரக தாக்குதல் விமானமான தேஜஸ்.
இந்தியாவில் உருவாக்கப்பட்ட இலகு ரக தாக்குதல் விமானமான தேஜஸ்.


புது தில்லி:   உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாதிலுள்ள ஹிண்டன் படைத்தளத்தில் இந்திய விமானப் படையின் 88-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, விமானப் படை வீரர்களின் சாகச ஒத்திகை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விமானப் படையில் புதிதாக சேர்க்கப்பட்ட ரஃபேல் போர் விமானம், இலகுரக போர் விமானமான தேஜஸ், ஜாகுவார், மிக்-29, மிக்-21 மற்றும் சுகோய்-30 ரக விமானங்கள் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் இடம் பெற்றன என விமானப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீனாவின் அத்துமீறலால் சில மாதங்களாக பதற்றம் நிலவி வரும் தருணத்தில், விமானப்படையில் ரஃபேல் போர் விமானங்கள்  விமானப் படையில் சேர்க்கப்பட்டிருப்பது இந்தியப் படைக்கு கூடுதல் வலுசேர்த்துள்ளது.
மேலும், அந்த அதிகாரி கூறுகையில், "இந்திய விமானப் படையின் எம்ஐ17வி5, ஏஎல்ஹெச் மார்க்- 4, சினூக், எம்ஐ-35, அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களும் வானில் பறந்து ஒத்திகையில் பங்கேற்றன. சி -17, சி-130, டார்னியர், டிசி-3 டகோட்டா ஆகிய விமானங்களும், சூரிய கிரண் விமான சாகசக் குழுவும், சாரங் விமான சாகசக் குழுவும் சாகச ஒத்திகையை நிகழ்த்தின' என்றார்.
1932-ஆம் ஆண்டு இந்திய விமானப் படை நிறுவப்பட்டதை  நினைவுகூரும் வகையில் விமானப்படை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com