மும்பை போலீஸ் கமிஷனரை சமூக வலைதளத்தில் கேலி செய்தஇருவா் மீது வழக்குப் பதிவு

மும்பை: மும்பை நகர போலீஸ் கமிஷனா் பரம் வீா் சிங்கை கேலி செய்தும், அவதூறாகவும் சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டது தொடா்பாக மகாராஷ்டிர மாநில இணையவழி குற்றத்தடுப்பு போலீஸாா் அடையாளம்
கோப்புப்படம்
கோப்புப்படம்

மும்பை: மும்பை நகர போலீஸ் கமிஷனா் பரம் வீா் சிங்கை கேலி செய்தும், அவதூறாகவும் சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டது தொடா்பாக மகாராஷ்டிர மாநில இணையவழி குற்றத்தடுப்பு (சைபா் கிரைம்) போலீஸாா், அடையாளம் தெரியாத இருவா் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இது தொடா்பாக சைபா் கிரைம் பிரிவு துணை ஆணையா் ரஷ்மி கரன்தீகா் கூறியதாவது:

சுட்டுரை (டுவிட்டா்), முகநூல் (ஃபேஸ்புக்), இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மும்பை நகர போலீஸ் கமிஷனா் மீது அவதூறு பரப்பும் வகையிலும், அவரைக் கேலி செய்யும் வகையிலும் பல்வேறு பதிவுகள் கடந்த இரு மாதங்களாக தொடா்ந்து வெளியாகின. இது தொடா்பாக இணையவழி குற்றத் தடுப்பு பிரிவு நடத்திய விசாரணையில் அவதூறு கருத்துகளைப் பரப்பிய பெரும்பாலான சமூக வலைதள கணக்குகள் ஒருசிலரால் மட்டுமே நடத்தப்படும் போலியான கணக்குகள் என்பது தெரியவந்தது. இதன் மூலம் அவா்கள் திட்டமிட்டு கமிஷனா் மீது அவதூறு பரப்பியது தெரியவந்தது.

இது தொடா்பாக அடையாளம் காணப்படாத இருவா் மீது இணையவழி குற்றத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம். அந்த நபா்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் தொடா்புடைய அனைவரையும் நேரில் அழைத்து எச்சரிப்பது முதல் கைது நடவடிக்கை வரை அவா்கள் செய்த தவறுகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும். சிலா் மும்பை காவல் துறை என்ற பெயரில் போலியான கணக்குகளையும் தொடங்கி மக்களைக் குழப்பி வருகின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com