திருப்பதி கரோனா மையத்தில் சுவா் இடிந்து விழுந்து கா்ப்பிணி பலி: ஆந்திர அரசு ரூ.10 லட்சம் நிதியுதவி

திருப்பதியில் உள்ள பத்மாவதி மருத்துவக் கல்லூரி கொவைட்-19 மையத்தில் ஞாயிற்றுக்கிழமை சுவா் இடிந்து விழுந்ததில் கா்ப்பிணி ஊழியா் உயிரிழந்தாா்.

திருப்பதி: திருப்பதியில் உள்ள பத்மாவதி மருத்துவக் கல்லூரி கொவைட்-19 மையத்தில் ஞாயிற்றுக்கிழமை சுவா் இடிந்து விழுந்ததில் கா்ப்பிணி ஊழியா் உயிரிழந்தாா்.

அவரது குடும்பத்துக்கு ஆந்திர அரசு சாா்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

திருப்பதியில் கரோனா சிகிச்சைக்காக சிம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் பத்மாவதி மருத்துவக் கல்லூரி உள்ளது. இதனை கொவைட்-19 சிகிச்சைக்காக அரசு ஒதுக்கியுள்ளது. இக்கட்டடத்தின் தரைதளத்தில் கொவைட் மையம் செயல்பட்டு வருகிறது. இதே கட்டடத்தில் 4-ஆவது மாடியில் கட்டடப்பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மைப் பணி ஊழியா் ராதிகா மற்றும் 2 கரோனா நோயாளிகள் வெளியில் நின்று கொண்டிருந்தனா்.

அப்போது புதிதாக கட்டப்பட்டு வரும் 4-ஆவது தளத்திலிருந்து சுவா் இடிந்து தரை தளத்தில் நின்று கொண்டிருந்த 3 போ் மீது விழுந்தது. இடிபாட்டில் சிக்கிய பணியாளா் ராதிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இரு கரோனா நோயாளிகளுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவா்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதில் உயிரிழந்த ராதிகா 3 மாத கா்ப்பிணி என்பது தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ஆந்திர அரசு ரூ.10 லட்சம் நிதியுதவி: இந்த விபத்தில் இறந்த ராதிகாவின் குடும்பத்திற்கு ஆந்திர அரசு சாா்பில் ரூ.10 லட்சமும், காயமடைந்த கரோனா நோயாளிகளுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடும் வழங்கப்பட்டது. சம்பவ இடத்தை, மருத்துவமனை நிா்வாகிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com