பிகார் தேர்தல்: விஐபி கட்சிக்கு 11 தொகுதிகளை ஒதுக்கியது பாஜக!

பிகார் பேரவைத் தேர்தலில் பாஜக தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள 121 இடங்களில் 11 இடங்களை விகாஷ்ஹீல் இன்சான் கட்சிக்கு (விஐபி) ஒதுக்கியுள்ளது.
பிகார் தேர்தல்: விஐபி கட்சிக்கு 11 தொகுதிகளை ஒதுக்கியது பாஜக!


பிகார் பேரவைத் தேர்தலில் பாஜக தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள 121 இடங்களில் 11 இடங்களை விகாஷ்ஹீல் இன்சான் கட்சிக்கு (விஐபி) ஒதுக்கியுள்ளது.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 28-ம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக நடைபெறுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் 122 இடங்களிலும், பாஜக 121 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

ஐக்கிய ஜனதா தளம் தனது 122 தொகுதிகளில், 7 தொகுதிகளை ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சாவுக்கு ஒதுக்கியது. பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 121 இடங்களில் விகாஷ்ஹீல் இன்சான் கட்சிக்கு ஒதுக்கப்படவுள்ள இடங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், விகாஷ்ஹீல் இன்சான் கட்சிக்கு பாஜக 11 இடங்களை ஒதுக்கியுள்ளது.

பிகாரில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நவம்பர் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com