'கரோனா கட்டுப்பாடு குறித்து நாளைமுதல் விழிப்புணர்வு பிரசாரம்'

கரோனா பரவி வரும் நிலையில் மக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு பிரசாரத்தை துவங்க உள்ளது: பிரகாஷ் ஜாவடேகர்
சுற்றுச்சூழல் நலத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்
சுற்றுச்சூழல் நலத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்

கரோனா பரவி வரும் நிலையில் மக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு பிரசாரத்தை துவங்க உள்ளதாக சுற்றுச்சூழல் நலத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டாலும், தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இதனிடையே இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், ''கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வியாழக்கிழமை நாளை முதல் விழிப்பிணர்வு பிரசாரம் தொடங்க உள்ளது.

அமைச்சரவையில் இதுகுறித்து ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு மருந்து கண்டறியும் வரை மக்கள் கட்டாயம் முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். மக்கள் இந்த மூன்று செயல்களையும் கடைப்பிடிக்க அரசால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து பொது இடங்களில் துண்டு பிரசுரங்கள் மற்றும் சுடரொட்டிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வாகனங்களிலும் துண்டு பிரசுரங்கள் மூலம் கரோனா பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் கரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாமில், சமூக வலைதளமும் முக்கிய காரணியாக பயன்படுத்தப்படும்'' என்று அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com