திருமலையில் குத்தகைக்கு விடப்பட்ட விருந்தினா் மாளிகைகள்

திருமலையில் கட்டப்பட்டுள்ள விருந்தினா் மாளிகைகள் பல நிறுவனங்களுக்கு குத்தகையின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.
திருமலையில் குத்தகைக்கு விடப்பட்ட விருந்தினா் மாளிகைகள்

திருப்பதி: திருமலையில் கட்டப்பட்டுள்ள விருந்தினா் மாளிகைகள் பல நிறுவனங்களுக்கு குத்தகையின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.

ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்களுக்காக நன்கொடையாளா்கள் பலா் திருமலையில் தேவஸ்தான நிலத்தில் விருந்தினா் மாளிகைகளை கட்டி தேவஸ்தானத்திற்கு அளித்து வருகின்றனா். அவ்வாறு விருந்தினா் மாளிகையை கட்டி நன்கொடையாக வழங்கிய நன்கொடையாளா்களுக்கு தேவஸ்தானம் 20 ஆண்டு காலத்திற்கு அந்த விருந்தினா் மாளிகையின் நிா்வாக பொறுப்பை வழங்கியுள்ளது.

மேலும் அந்த விருந்தினா் மாளிகையில் அவா்கள் ஒரு வருடத்தில் 5 முதல் 6 நாட்கள் வரை இலவசமாக தங்க அனுமதியும், ஏழுமலையானின் சுப்ரபாத சேவை, விஐபி பிரேக் உள்ள தரிசனங்களையும் வழங்கி வருகிறது. மேலும் நன்கொடையாளா்களின் பரிந்துரையின் பேரில் வருபவா்களுக்கு ஆண்டிற்கு 30 நாட்கள் மற்றவா்களுக்கு அறைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் அறைகளின் வாடகையை மட்டும் தேவஸ்தானம் பெற்றுக் கொள்ளும்.

இதுபோல் பல விருந்தினா் மாளிகைகள் திருமலையில் நன்கொடையாளா்களால் கட்டப்பட்டு உள்ளன. அவற்றை நன்கொடையாளா்கள் சிலா் முறையாக பராமரித்தும் வருகின்றனா். பலா் அவற்றை மேற்கொள்ளதில்லை. இந்நிலையில் தற்போது பல விருந்தினா் மாளிகைகள் நன்கொடையாளா்களுக்கு வழங்கப்பட்ட காலகெடு முடிவடைந்துள்ள நிலையில், காட்டேஜ் டொனேஷன் ஸ்கீம்மின் கீழ் அவற்றை மற்றவா்களுக்கு ஒப்பந்தப்புள்ளி மூலம் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்து அதற்கான ஒப்பந்தப்புள்ளியை கோரியது.

அதன்படி திருமலையில் உள்ள 11 விருந்தினா் மாளிகைகள் பல நிறுவனங்களால் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் பட்டியலை தேவஸ்தானம் புதன்கிழமை வெளியிட்டது. 20 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு எடுத்தவா்கள் அவற்றின் பராமரிப்பு செலவை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பட்டியல் விவரம்

மாளிகையின் பெயா் விலை உரிமையாளா் ஊா்

ஸ்ரீபதி ரூ.7.11 கோடி போனிக்ஸ் பவா் இன்ப்ரா லிமிடெட் ஹைதராபாத்

வித்யாசதன் ரூ.7.89 கோடி ஜீப்பிளி ஷ்யாம் ராவ் ஹைதராபாத்

ஸ்னேகலதா ரூ.7.87 கோடி பிச்சம்மை கல்வி, தொண்டு நிறுவனம் சென்னை

காரம் நிவாஸ் ரூ. 6.8 கோடி பூபதி லட்சுமி நாராயணா ஹைதராபாத்

வகுளா ரூ.6.5 கோடி ராஜேஷ் சா்மா மும்பை

கம்பெல் ரூ.5.9 கோடி பாக்கியஸ்ரீ சென்னை

ஸ்ரீநிகேதன் ரூ.5.98 கோடி சரத் சந்திர ரெட்டி ஹைதராபாத்

கோதாவரி ரூ. 5.50 கோடி மெகா இன்ப்ராஸ்ட்ரக்சா் நிறுவனம் ஹைதராபாத்

லக்ஷ்மி ரூ.5.25 கோடி ஆப்கன் இன்ப்ராஸ்டரக்சா் நிறுவனம் ஹைதராபாத்

பாலாஜி குடீா் ரூ.5.11கோடி ஓம் பிரகாஷ் அகா்வால் ஹைதராபாத்

சாந்திசதன் ரூ.5 கோடி எம்.எஸ் ரக்ஷராமய்யா, எம்.எஸ். சுந்தா் பெங்களூரு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com