மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங். மகளிர் அணியினர் பேரணி

ஹாத்ரஸ் கூட்டுப்பாலியல் வன்கொடுமையை கண்டித்து மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மகளிர் அணியினர் கண்டன பேரணியில் ஈடுபட்டனர்.
ஹாத்ரஸ் கூட்டுப்பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து பேரணியில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் மகளிர் அணியினர்
ஹாத்ரஸ் கூட்டுப்பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து பேரணியில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் மகளிர் அணியினர்

உத்தரப்பிரதேச மாநிலம்  ஹாத்ரஸ் பகுதியில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஆதிக்க சமூகத்தை சேர்ந்த 4 நபர்களால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.

இதில் இளம்பெண்ணின் உடலை அவர்களது பெற்றோர்களின் முழு அனுமதியையும் மீறி காவல்துறையினரே அவசரமாக அவசரமாக எரித்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து பல்வேறு பெண்கள் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மகளிர் அணியினர் கண்டனப் பேரணியில் ஈடுபட்டனர். முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு நடத்திய பேரணியைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் பேரணியில் ஈடுபட்டனர்.

இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பதாகைகளை ஏந்தியவாறு கண்டன கோஷங்களை எழுப்பி பேரணியில் ஈடுபட்டனர். 

வரும் ஞாயிற்றுக் கிழமை பாஜக மகளிர் அணியினர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் அமைதியை சீர்குலைப்பதாகக் கூறி முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக பேரணியில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com