ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை

ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் (கோப்புப்படம்)
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் (கோப்புப்படம்)

ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இருதரப்பு பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளார்.

‘குவாட்’ என்றழைக்கப்படும் நாற்கர கூட்டமைப்பைச் சோ்ந்த இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகியவற்றின் வெளியுறவு அமைச்சா்கள் பங்கேற்ற மாநாடு ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

இதில் கலந்துகொண்டு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் அமைச்சர் ஜெய்சங்கர் ஈடுபட்டார்.

இதில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒருங்கிணைந்த வளா்ச்சி  காண்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

இதனைத்தொடர்ந்து இன்று ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் தோஷிமிட்சு மொடேகியை (Toshimitsu Motegi) சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com