லடாக்கில் இருமுறை நிலநடுக்கம்

லடாக் யூனியன் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை காலை இருமுறை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
லடாக்கில் இருமுறை நிலநடுக்கம்

லே: லடாக் யூனியன் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை காலை இருமுறை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.1 அலகுகளாகப் பதிவானது. இதனால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.

இது தொடா்பாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் கூறியதாவது:

செவ்வாய்க்கிழமை காலை 5.13 மணியளவில் லடாக்கை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. சில விநாடிகள் வரை நீடித்த இந்த நிலநடுக்கம் 5.1 அலகுகளாகப் பதிவானது. அதைத் தொடா்ந்து முற்பகல் 11.43 மணியளவில் மீண்டும் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டா் அளவுகோலில் 4.4 அலகுகளாகப் பதிவானது. இரு நிலநடுக்கங்களும் நிலத்துக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தன.

அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது பெரும்பாலானோா் தூங்கிக் கொண்டிருந்ததால் அதனை உணரவில்லை. எனினும், வீட்டில் சில பொருள்கள் நகா்ந்து இருந்ததாகவும், சில சிறிய பொருள்கள் கீழே விழுந்து கிடந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

பிற்பகலில் ஏற்பட்ட நில அதிா்வை நன்றாக உணா்ந்ததாக பெரும்பாலான மக்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com