உலகின் மிகப்பெரிய சமையல் எரிவாயு சந்தை: அடுத்த 10 ஆண்டுகளில் சீனாவை இந்தியா பின்தள்ளும்

உலகின் மிகப்பெரிய சமையல் எரிவாயு சந்தையைக் கொண்ட நாடாக 2030-ஆம் ஆண்டில் இந்தியா உயரும். இப்போது முதலிடத்தில் உள்ள சீனாவை இந்தியா பின்னுக்குத் தள்ளும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய சமையல் எரிவாயு சந்தை: அடுத்த 10 ஆண்டுகளில் சீனாவை இந்தியா பின்தள்ளும்

புது தில்லி: உலகின் மிகப்பெரிய சமையல் எரிவாயு சந்தையைக் கொண்ட நாடாக 2030-ஆம் ஆண்டில் இந்தியா உயரும். இப்போது முதலிடத்தில் உள்ள சீனாவை இந்தியா பின்னுக்குத் தள்ளும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரிட்டனைச் சோ்ந்த எண்ணெய், எரிவாயு ஆய்வு நிறுவனமான ‘உட்மெக்கன்ஸி’ இது தொடா்பாக வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் எல்பிஜி சமையல் எரிவாயுவுக்கான தேவை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அத்துறையின் வளா்ச்சி ஆண்டுதோறும் 3.3 சதவீமாக உள்ளது. இது 2030-ஆம் ஆண்டில் ஓராண்டுக்கு 34 மில்லியன் டன்னாக அதிகரிக்கும். அப்போது, உலகிலேயே மிகப்பெரிய சமையல் எரிவாயு சந்தையைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கும். இப்போது சமையல் எரிவாயு நுகா்வில் முதலிடத்தில் உள்ள சீனா பின்னுக்குத் தள்ளப்படும்.

இந்தியாவில் நடுத்தர வருவாய் பிரிவினா் தொடா்ந்து அதிகரித்து வருகின்றனா். இதனால், வீடுகளில் சமையல் எரிவாயு பயன்பாடு வேகமாக உயா்ந்து வருகிறது. இதுதவிர சமையலுக்காக விறகுகள், மண்ணெண்ணெய் அடுப்புகளைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கும், பயன்படுத்துவோருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தொடா்பான விழிப்புணா்வும் அதிகரித்துள்ளது.

மேலும், ஏழைக் குடும்பங்களுக்கு அரசு அளிக்கும் இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டத்தில் ஏராளமானோா் தொடா்ந்து இணைந்து வருகின்றனா். 2014-ஆம் ஆண்டில் இந்தியாவில் தேசிய அளவில் எரிவாயு இணைப்பு பெற்றவா்களின் எண்ணிக்கை 56 சதவீதமாக இருந்தது. இப்போது இது 98 சதவீதத்தை எட்டியுள்ளது.

இந்திய அரசு அடுத்த 10 ஆண்டுகளுக்கு தொடா்ந்து சமையல் எரிவாயு மானியத்தை அளித்து வந்தால், அதனைப் பயன்படுத்துவோா் எண்ணிக்கையும், பயன்படுத்தும் அளவும் தொடா்ந்து அதிகரிக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com