இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த 25 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய புதைபடிமம்

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 25 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய தட்டான் பூச்சியின் புதைபடிமத்தை மேற்குவங்க விஞ்ஞானிகள் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
25 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய தட்டான் பூச்சியின் புதைபடிமம்
25 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய தட்டான் பூச்சியின் புதைபடிமம்

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 25 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய தட்டான் பூச்சியின் புதைபடிமத்தை மேற்குவங்க விஞ்ஞானிகள் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

மேற்கு வங்கத்தின் நான்கு பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்கள் கிட்டத்தட்ட ஒரு வருடமாக சோட்டானக்பூர் பீடபூமியின் வண்டல் பகுதிகளில்  புதைபடிவங்களைத் தேடி வருகின்றனர். சித்தோ-கன்ஹோ-பிர்ஷா பல்கலைக்கழகத்தின் தாவரவியல் உதவி பேராசிரியர் மகாசின் அலிகான் தலைமை தாங்கிய இந்த தேடுதல் பணியில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் லதேஹர் மாவட்டத்தில் மண்ணின் மேற்பரப்பில் இருந்து சுமார் 5 மீ ஆழத்தில் தட்டான் பூச்சியின் புதைபடிமத்தைக் கண்டறிந்தனர்.

மேற்கு வங்க விஞ்ஞானிகளின் இந்தக் கண்டுபிடிப்பு இந்தியாவில் கிடைத்த முதல் தட்டான் புதைபடிவமாகும். இந்தப் புதைபடிவமானது நியோஜீன் காலத்தின் பிற்பகுதியைச் சேர்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 3 செ.மீ நீளமும், 2.5 செ.மீ உள்ள இந்தப் புதைபடிமம் 25 லட்சம் ஆண்டுகளுக்கும் முந்தையது ”என்று கல்கத்தா பல்கலைக்கழக தாவரவியல் துறையின் பேராசிரியர் சுபீர் பெரா தெரிவித்துள்ளார்.

2013 ஆம் ஆண்டில், 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய புதைபடிவம் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com