ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு 

மத்திய ரிசர்வ் வங்கி, 2020-ஆம் ஆண்டில், தன்னுடைய நான்காவது பணக் கொள்கைக் கமிட்டி கூட்டத்தில், ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீகிதமாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 
ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு 


மும்பை: மத்திய ரிசர்வ் வங்கி, 2020-ஆம் ஆண்டில், தன்னுடைய நான்காவது நிதிக்கொள்கைக் குழு கூட்டத்தில், ரெப்போ வட்டி விகிதம் 4 சதவிகிதமாகவே தொடரும் என தெரிவித்துள்ளது. 

வட்டி விகிதங்களில் மாற்றம் குறித்து இரு மாதங்களுக்கு ஒருமுறை நிதிக்கொள்கைக் குழு கூட்டம் நடைபெறும். அதன்படி, மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில், ரெப்போ வட்டி விகிதத்தை 4 சதவீகிதத்தில் இருந்து மாற்றாமல் இருக்க நிதிக்கொள்கைக் குழு ஒருமனதாக வாக்களித்துள்ளது. குறைந்தபட்சம் நடப்பு நிதியாண்டு மற்றும் அடுத்த ஆண்டு தேவைப்படும் வரை நிதிக்கொள்கையின் இதே நிலைப்பாட்டை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார். 

இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி கந்ததாஸ் தெரிவிக்கையில், கரோனா பேரிடா் காரணமாக இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி விகிதம் முன்னெப்போதும் இல்லாத மோசமான நிலைக்கு சென்றுள்ளது. கரோனா பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்க அறிவிப்புகளால் பல துறைகளைச் சோ்ந்த பெரும்பாலான நிறுவனங்கள் செயல்பட முடியாமல் முடங்கிப் போயின. இதன் காரணமாக, பொருளாதாக வளர்ச்சி குறித்தான நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

எனவே, இதுபோன்ற சூழல்களை கருத்தில் கொள்ளும்போது, நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி (-)9.5 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை சந்திக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

'ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீகிதம் என்ற அளவிலும், ரிவர்ஸ் ரெப்போ ரேட் விகிதம் 3.35% என்ற அளவிலேயே தொடரும். இதனால் வங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது.'

நாட்டின் பொருளாதாரம் அவநம்பிக்கையில் இருந்து நம்பிக்கையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வரும் 2021 ஜனவரி-மார்ச் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும்.  செப்டம்பர் மாதத்தில் உயர்ந்த பணவீக்க விகிதம் அக்டோபர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாத காலக்கட்டத்தில் படிப்படியாக குறையும் என சக்தி காந்த தாஸ் தெரிவித்தார். 

ரெப்போ ரேட் என்பது ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு கொடுக்கும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும். ரெப்போ ரேட் குறையும்போது, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமும் குறையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com